கோடை காலம் தொடங்கினாலே சுட்டெரிக்கும் வெயிலோடு நாவிற்கு சுவை சேர்க்கும் மாம்பழங்களும் நமது நினைவிற்கு வரும். அந்தளவிற்கு மாம்பழங்களின் வரத்து ஏப்ரல் மாதங்களில் அதிகமாகவே இருக்கும். இந்த சூழலில் குளிருக்கு இதமாக இருக்க வேண்டும் என்பதற்காக, மாம்பழங்களை வைத்து ஜூஸ் போன்றவற்றை செய்து சாப்பிட்டாலும், ஐஸ்கிரீம்களைத் தான் குழந்தைகள் விரும்பி கேட்பார்கள். இதோ இன்றைக்கு ருசியான மாம்பழங்களை வைத்து செய்யப்படும் மாம்பழ மலாய் ஐஸ்கிரீம் ரெசிபி குறித்து அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
![mango malai icecream]()
மேலும் படிக்க: ஆரோக்கியமான சுவையான பால் அல்வா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
- மாம்பழம் - 2
- பால் - அரை லிட்டர்
- பால் பவுடர் - 50 கிராம்
- வெண்ணிலா ஐஸ்கிரீம் - 100 கிராம்
- சர்க்கரை - 1 கப்
செய்முறை:
- மாம்பழ மலாய் ஐஸ்கிரீம் செய்வதற்கு முதலில் பால், சர்க்கரை, பால் பவுடர், வெண்ணிலா ஐஸ்கிரீம் போன்ற அனைத்துப்பொருள்களையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக்கொள்ளவும். இதையடுத்து நன்கு பழுத்த மாம்பழத்தின் தோல் சீவி சிறிது சிறிதாக வெட்டி அரைத்து வைத்துள்ள பால கலவையுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- இதை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றிய பின்னதாக பிளாஸ்டிக் கவர் போட்டு நன்கு அடைத்த பின்னதாக அரை மணி நேரத்திற்கு பிரீட்ஜில் வைக்கவும்.
- இதையடுத்து வெட்டி வைத்துள்ள மாம்பழம் மற்றும் சிறிதளவு வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து லேசாகக் கிளறிவிட்டு 5 மணி நேரமாவது ப்ரீட்ஜில் வைத்தால் போதும். சுவையான மாம்பழ மலாய் ஐஸ்கிரீம் ரெடி.
- இதுபோன்று உங்களது வீடுகளில் ட்ரை பண்ணிப்பாருங்கள். நிச்சயம் இனிமேல் அடிக்கடி மாம்பழ ஐஸ்கிரீம் செய்து தரச் சொல்லி அடம்பிடிப்பார்கள். இது மட்டுமின்றி மாம்பழங்களை வைத்து குல்பி, ஸ்மூத்தி, ஜூஸ் போன்ற ரெசிபிகளையும் கோடை வெயிலுக்கு இதமாகச் செய்து சாப்பிட மறந்துவிடாதீர்கள்.
பருவகால மாம்பழம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருமா?
மேலும் படிக்க: உடலுக்கு ஆற்றல் தரும் பானங்கள்; சுலபமாக வீட்டிலேயே செய்யும் முறை!
- கோடைக்காலத்தில் மாம்பழத்திற்குக் கொஞ்சம் கூட பஞ்சம் இருக்காது. இதனால் தான் நம்முடைய மூதாதையர்கள் அந்தந்த பருவகாலங்களில் விளையக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சளிப்பில்லாமல் சாப்பிடச் சொல்லுவார்கள். இதுபோன்று தான் மாம்பழமும். அடிக்கிற வெயிலில் உடல் சோர்வாகக்கூடும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் இந்த பருவகாலத்தில் விளையக்கூடிய மாம்பழம் சிறந்த தேர்வாக உங்களுக்கு அமையும். ஆம் இதில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.