herzindagi
image

எலும்புகளை இரும்பாக்கும் வெற்றிலை துவையல் செய்வது எப்படி? இதோ ஈஸி ரெசிபி

கால்சியத்தின் சிறந்த ஆதாரமாக உள்ள வெற்றிலை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வலிமையை அதிகரிப்பதோடு எலும்பு தொடர்பான நோய்களை தடுக்கிறது. இப்படி மகத்தான மருத்துவ குணங்களை கொண்ட வெற்றிலையில் சுவையான துவையல் செய்யலாம்.
Editorial
Updated:- 2025-04-04, 21:01 IST

ஆன்மீக விழாக்கள் மற்றும் குடும்ப விழாக்களின் போதும் மரியாதைக்குரிய அடையாளமாக வெற்றிலை வைக்கப்படும். சுபகாரிய பொருட்களுக்காக மட்டுமல்ல உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவாகவும் வெற்றிலை உள்ளது. வெற்றிலையில் உள்ள வைட்டமின் சி, தியாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின் போன்ற சத்துக்கள் உடலில் உள்ள பல பிரச்னைகளை நீக்கும். அதே போல் கால்சியத்தின் சிறந்த ஆதாரமாக உள்ள வெற்றிலை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வலிமையை அதிகரிப்பதோடு எலும்பு தொடர்பான நோய்களை தடுக்கிறது. இப்படி மகத்தான மருத்துவ குணங்களை கொண்ட வெற்றிலையில் சுவையான துவையல் செய்யலாம் வாங்க.

வெற்றிலை துவையல் செய்ய தேவையான பொருட்கள்

  • 10 - வெற்றிலை
  • 4 நறுக்கிய தக்காளி
  • 2 ஸ்பூன் - கடலை பருப்பு
  • 5 காய்ந்த மிளகாய்
  • 3 ஸ்பூன் - உளுத்தம் பருப்பு
  • 2 ஸ்பூன் - கொத்தமல்லி விதை
  • 1/4 ஸ்பூன் - வெந்தயம்
  • 1 ஸ்பூன் - மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் - பெருங்காயம்
  • 1 ஸ்பூன் - கடுகு
  • 10 - மிளகு
  • சிறிதளவு புளி
  • உப்பு
  • எண்ணெய்

மேலும் படிக்க: தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படை ரெசிபி; டேஸ்ட் வேற லெவல்

image

வெற்றிலை துவையல்

வெற்றிலை துவையல் செய்முறை

  • முதலில் வெற்றிலையை தண்ணீரில் நன்றாக அலசி அதன் காம்பு மற்றும் நடு நரம்பை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடலை பருப்பு, கொத்தமல்லி விதை, வெந்தயம், உளுத்தம்பருப்பு, மிளகு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுக்கவும்.
  • தொடர்ந்து வறுத்த மசாலா கலவையை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  • அதன் பின் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, நறுக்கிய தக்காளி மற்றும் புளி சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும்.
  • அடுத்ததாக அதில் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து வதக்கி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெற்றிலையை சேர்த்து 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து கிளறுங்கள்.
  • வெற்றிலையின் பச்சை வாசனை நீங்கி நன்றாக வதங்கியதும் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அத்துடன் பொடியாக அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  • இறுதியாக கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை எண்ணெயில் தாளித்து கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள துவையலில் சேர்த்து கலந்தால் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த வெற்றிலை துவையல் ரெடி.

மேலும படிக்க: வாயில் எச்சில் ஊற வைக்கும் ராஜஸ்தானி மட்டன் கறி ரெசிபி டிப்ஸ்!

இந்த வெற்றிலை துவையலை சுடு சோறு, இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சுவை அள்ளும். குழந்தைகளுக்கு வெற்றிலை துவையல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]