நம் தினசரி உணவில் பச்சை பயிறு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து புரத சத்து அதிக அளவு கிடைக்கிறது. இது பாசிப்பயறு, சிறு பயறு என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் பல வீடுகளில் கொழுக்கட்டை, கஞ்சி, பொங்கல், பாயசம் போன்ற உணவு வகைகளில் அதிக அளவு பச்சை பயறு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து எளிய முறையில் சுவையான பச்சை பயறு சாதம் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
சுவையான பச்சை பயறு ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:
- ஒரு கப் வடித்த சாதம்
- அரை கப் முளைக்கட்டிய பச்சைப் பயறு
- ஒரு கட்டு வெங்காயத்தாள்
- ஒரு வெங்காயம்
- சிறிய துண்டு இஞ்சி
- நான்கு பச்சை மிளகாய்
- அரை டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள்
- பாதி அளவு குடை மிளகாய்
- கால் கப் நறுக்கிய முட்டைகோஸ்
- ஒரு மூடி எலுமிச்சம் பழச் சாறு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு.
முளைக்கட்டிய பச்சை பயிறு சாதம் செய்முறை:
- முதலில் இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து ஒரு மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- இப்போது குடைமிளகாய், முட்டைகோஸ், வெங்காயத்தாள் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- அரைத்து வைத்த இஞ்சி பச்சை மிளகாய் விழுதை இந்த நறுக்கிய காய்கறிகள் உடன் சேர்த்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நன்கு வறுக்கவும்.
- பிறகு இதில் முளைக்கட்டிய பச்சை பயறு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- இதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகு தூள் மற்றும் வடித்த சாதம் சேர்த்து கிளறி விடுங்கள்.
- பின்னர் தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- அவ்வளவுதான் சுவையான சத்தான முளைப்பயறு சாதம் ரெடி.
மேலும் படிக்க: சுவையான ஆரோக்கியமான பீட்ரூட் ஊத்தாப்பம்!
பச்சை பயரின் ஆரோக்கிய நன்மைகள்:
- தலைமுடி, கண்கள், நகங்கள், சருமம், கல்லீரல் போன்றவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பச்சை பயறு உதவுகிறது.
- ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, வாரம் இருமுறை பச்சை பயறை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும்.
- அதே போல காலரா மலேரியா போன்ற நோய்களை குணமாக்க பச்சை பயறு உதவுகிறது.
- நம் தினசரி உணவில் பச்சை பயறு சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாளடைவில் பித்தம், மலச்சிக்கல் போன்றவை குணமாகும்.
- மேலும் பச்சை பயறுடன் வல்லாரை கீரையை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதே போல இது அதிக நேரம் பசி இல்லாமல் வயிற்றை நிறைவாக வைக்கவும் உதவும்.
- கர்ப்பிணிப் பெண்களும் குழந்தை பெற்ற தாய்மார்களும் தாய்ப்பால் சுரப்பதற்கு பச்சைபயிறு சாப்பிட்டு வரலாம்.
- உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்களும் தினமும் பச்சை பயறு சாப்பிட்டு வந்தால் எளிதில் உடல் எடை குறையும்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation