இன்ஸ்டாவில் திரும்பும் திசையெல்லாம் கூமாபட்டி... கூமாபட்டி.. ஒற்றை நபர் பதிவிட்ட வீடியோவால் கூமாபட்டி நெட்டிஸன்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது. கூமாபட்டியில் வசிக்கும் நபர் ஒருவர் அங்குள்ள அணைப்பகுதியில் குளித்தபடி சுற்றியுள்ள மலைகளை அமேசானுடன் ஒப்பிட்டு கூமாபட்டியை சொர்க்கத்திற்கு இணையாக வர்ணித்து புகழ்பாடுகிறார். வீடியோவில் இயற்கை எழில் நிறைந்த பசுமை காட்சிகள் நம்மை வெகுவாக கவர்கின்றன. அவர் தொடர்ந்து வீடியோக்கள் பதிவிடவே கூமாபட்டி பற்றி தெரிந்துகொள்ள பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கூமாபட்டி எங்குள்ளது ? கூமாபட்டிக்கு செல்வது எப்படி ? கூமாபட்டியின் சுற்றுலா தலங்கள் என்னென்ன ? இந்த பதிவில் பார்ப்போம்.
கூமாபட்டி கிராமம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. விருதுநகரில் இருந்து சுமார் 48 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் கூமாபட்டியை அடையலாம். கூமாபட்டி கிராமம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது. கூமாபட்டிக்கு செல்வதற்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வீடியோவில் சொல்வது போல கூமாபட்டி தீவு கிடையாது. ஆனால் மேற்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணைப் பகுதி மற்றும் விவசாய பகுதிகள் மிகவும் பசுமையாக காட்சியளிக்கின்றன.
பிளவக்கல் அணைப் பகுதியில் தண்ணீர் ஓட்டம் மிதமான அளவில் இருக்கும் போது சுற்றுவட்டார பகுதி மக்கள் உற்சாக குளியல் போடுகின்றனர். வீடியோவில் சொல்வது போல் அணைப்பகுதி தண்ணீர் கண்ணாடி போல் தூய்மையாக தெரிகிறது. இங்கு சிறுவர் பொழுதுபோக்கு பூங்காவும் உள்ளது. அணையில் நீர் வற்றாமல் தேவையான நேரங்களில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாகவே அருகில் கிராமத்திற்கு வத்திராயிருப்பு = வற்றாத + இருப்பு என பெயர் வைத்துள்ளனர்.
மேலும் படிங்க தலைமலை : தலையெழுத்தை மாற்றும் சஞ்சீவிராய பெருமாள் மலைக்கோயில் தரிசனம்
கூமாபட்டி தாமரைக்குளம் மற்றும் கிராம கிணற்றில் வார விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது. கூமாபட்டி அருகே கிழவன் கோவில், ஈஸ்வரன் கோவில், பூமலை ராஜா கோவில், பிள்ளையார் கோவில், அத்தி கருப்புசாமி கோவில் போன்ற வழிபாட்டு தலங்களும் உள்ளன.
கூமாபட்டியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் குருவிப்பாறை அருவி சென்றடையலாம். இங்கு பாறைகளுக்கு இடையில் இருந்து ஊற்றெடுத்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
வீடியோவில் அந்த நபர் கூமாபட்டி வந்தால் மன அழுத்தம் குறையும், காதல் தோல்வியில் இருந்து மீண்டு விடலாம், கூமாபட்டி ஒரு சொர்க்க பூமி என குறிப்பிடுகிறார். விருப்பமுள்ள நபர்கள் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள தகவல்களை பயன்படுத்தி கூமாபட்டி செல்லலாம்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]