தமிழக அரசின் போக்குவரத்து கழகம் கும்பகோணம் சார்பில் கும்பகோணத்தை சுற்றியுள்ள ஒன்பது நவக்கிரக பரிகார திருத்தலங்களுக்கு சிறப்பு தரிசனம் செய்ய குறைந்த கட்டணத்தில் பக்தர்களுக்கான பேருந்து சேவை ஒரு ஆண்டுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு ஆண்டில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த சேவையில் பயன்பெற்றுள்ளனர். திங்களூர் சனி பகவான், ஆலங்குடி குரு பகவான், திருநாகேஸ்வரம் ராகு, சூரியனூர் சூரிய பகவான், வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய், திருவெண்காடு புதன், கீழப்பெரும்பள்ளம் கேது, திருநள்ளாறு சனி பகவான் தலங்களில் ஒரே நாளில் வழிபட இது சிறப்பான பயண திட்டமாகும். பயண விவரம், முன்பதிவு விவரம், பேருந்து சேவை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
காலை 5 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் நவகிரக தலங்களுக்கான பயணம் தொடங்கும். ஒவ்வொரு திருத்தலத்திலும் சிறப்பு தரிசனத்தை முடித்து இரவு 8 மணி அளவில் கும்பகோணம் பேருந்து நிலையத்திலேயே விடப்படுவீர்கள். உங்களுடன் வழிகாட்டி ஒருவர் உடன் வருவார். அவர் கோயில்களின் வரலாற்றையும் பக்தர்களுக்கு விவரிப்பார். தமிழ் தெரியாத பக்தர்களுக்காக வாட்ஸ் அப்பில் வீடியோ வழிகாட்டி பகிரப்படும். ஒவ்வொரு தலத்திலும் தரிசனம் செய்வதற்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படும்.
இந்த பயணத்திற்கு முன்பதிவு செய்ய www.tnstc.in தளத்தை பயன்படுத்துங்கள். ஏசி இல்லாத பேருந்தில் பயணிக்க 750 ரூபாய் கட்டணமும், ஏசி பேருந்தில் பயணிக்க ஆயிரத்து 350 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும். ஏசி பேருந்து சேவை வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு மட்டுமே. பயணத்தில் காலை உணவு, மதிய உணவு, சிற்றுண்டி ஆகியவை பக்தர்களுக்கு கோவில்களிலேயே வழங்கப்படும்.
முழு விவரங்களுக்கு 94432 63988 மற்றும் 94897 95509 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]