herzindagi
image

Kannappa movie OTT release: கண்ணப்பா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு; எங்கு, எப்போது பார்க்கலாம்?

Kannappa movie OTT release: கண்ணப்பா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ஓடிடியில் இந்த திரைப்படத்தை காண பலரும் ஆர்வமாக உள்ளனர்.
Editorial
Updated:- 2025-09-02, 17:24 IST

Kannappa movie OTT release: தெலுங்கில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான கண்ணப்பா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓடிடியில் இப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

மேலும் படிக்க: Coolie ott release: ரஜினிகாந்த் - லோகேஷ் கூட்டணியில் வெளியான கூலி; எந்த ஓடிடியில் எப்போது பார்க்கலாம்?

 

இதிகாசத்தை மையமாக கொண்டு தெலுங்கில் வெளியான கண்ணப்பா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்படத்தின் நாயகன் விஷ்ணு மஞ்சு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இந்துக்களின் இதிகாசத்தில் வரும் கண்ணப்பா என்ற கதாபாத்திரம், சிவன் மீது கொண்ட பக்தியை விளக்கும் விதமாக தெலுங்கில் கண்ணப்பா என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

Kannappa movie

 

கலவையான விமர்சனங்களை பெற்ற கண்ணப்பா:

 

தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வெளியானது. குறிப்பாக, மோகன்லால், பிரபாஸ், அக்‌ஷய் குமார், ப்ரீத்தி முகுந்தன், மோகன் பாபு, சரத்குமார் என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர். எனினும், இப்படம் வெளியான போது கலவையான விமர்சனங்களையே பார்வையாளர்களிடம் இருந்து பெற்றது. இதனால் பெரும் பொருட்செலவில் வெளியான இப்படம், வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை.

மேலும் படிக்க: கூலி திரைப்படத்தில் கல்யாணியாக கலக்கிய நாயகி; யார் இந்த ரச்சிதா ராம்?

 

கண்ணப்பா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு:

 

பெரும்பாலான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களில் ஓடிடியில் வெளியிடப்படும். ஆனால், கண்ணப்பா திரைப்படம் சுமார் 10 வாரங்களுக்கு பின்னர் ஓடிடியில் வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் கண்ணப்பா திரைப்படம் வெளியாக இருக்கிறது.

 

அதன்படி, இப்படத்தை திரையரங்கில் காண தவறவிட்ட பார்வையாளர்கள் இதனை இனி ஓடிடியில் கண்டு மகிழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்கில் இப்படம் பெற்ற வரவேற்பை விட ஓடிடியில் இப்படத்திற்கு கூடுதல் வரவேற்பு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Twitter

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]