கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கிடைக்கும் தொடர் விடுமுறையை பயன்படுத்தி வட இந்தியாவுக்கு நீங்கள் சுற்றுலா செல்ல திட்டமிட்டால் இந்தப் பட்டியல் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். பனி மூடிய மலைகளின் அழகு காணவும், கொட்டும் பனியில் விளையாடி மகிழவும் நீங்கள் விரும்பினால் கீழே கொடுக்கப்படும் இடங்களைத் தவற விடாதீர்கள்
குளிர்காலத்தில் பிரமிப்பூட்டும் வெள்ளை நிலப்பரப்பை நாம் லடாக்கில் காண முடியும். பல புகைப்படங்கள் எடுத்து ஆழமான நினைவுகளை உருவாக்குவதற்கும் சரியான பின்னணியை லடாக் தருகின்றது. வெப்பநிலை 0° C க்கு கீழே குறைந்து ஏரிகள் உறைந்து காணப்படுகின்றன. இங்குள்ள ஜன்ஸ்கர் நதியும் ஏறக்குறைய உறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.
நீங்கள் குளிரை விரும்பாத நபர் என்றால் லடாக்கிற்கு ஏப்ரல் முதல் ஜூலை வரை செல்லலாம். எனினும் சாகசப் பிரியர்கள் பெரும்பாலும் குளிர்காலத்திலேயே லடாக்கிற்கு வருகை தருகின்றனர். இங்கு சுற்றுலாவுக்காக வரும் நபர்கள் மலையேற்றம் மற்றும் பனிச்சறுக்கு போன்ற செயல்களில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவர்.
சோன்மார்க், குல்மார்க் மற்றும் பஹல்காம் ஆகியவை டிசம்பரில் பனிப்பொழிவைப் பெறும் காஷ்மீரில் உள்ள பிரபலமான இடங்களாகும். வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸுக்கு கீழே குறைந்துவிடும். நீங்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மென்மையான பனியால் பாதைகள் மூடப்பட்டு இருக்கும். டிசம்பரில் மிகக் குளிராக இருக்கும் இந்தியாவின் சில இடங்களில் காஷ்மீரும் ஒன்றாகும்.
மேலும் படிங்க பெங்களூருவின் பிரபலமான சுற்றுலா தலங்கள்
சிக்கிம் மாநிலம் லாச்சுங் அருகே ஜீரோ பாயின்ட் உள்ளது. இது எப்போதும் பனியால் மூடப்பட்டிருக்கும், கடல் மட்டத்திலிருந்து 9,600 அடி உயரத்தில் இருப்பதால் விடுமுறையைத் திட்டமிடுவதற்கு இது சரியான இடமாக அமைகிறது. இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இல்லை என்றாலும் ஏராளமான இயற்கை காட்சிகளைக் காண லாச்சுங் அற்புத இடமாகும்.
நவம்பர் மாதத்திலேயே ஆலி பனிப்பொழிவைப் பெறத் தொடங்கிவிட்டது. அதன் வளமான நிலப்பரப்பு பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 9,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
அவுலி இந்தியாவின் பிரபலமான ஹைக்கிங் மற்றும் பனிச்சறுக்கு இடமாகும். கருவேல மரங்கள் மற்றும் கூம்பு தாங்கும் செடிகளால் சூழப்பட்ட இந்த சுற்றுலா தலமானது இமயமலைத் தொடர்களின் பரந்த காட்சியை அளிக்கிறது. உத்தரகாண்ட் சுற்றுலாத் துறையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியின் போது நீங்கள் இங்குச் சுற்றுலா வரத் திட்டமிடலாம்.
மேலும் படிங்க கொடைக்கானல் - தென்னிந்தியாவின் பிரபலமான சுற்றுலாத் தளம்
குஃப்ரியில் அக்டோபர் மாதத்தில் தொடங்கிய குளிர்காலம் மார்ச் மாதம் வரை நீடிக்கும். இது ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவிற்கு அருகில் உள்ள ஒரு மலைவாசஸ்தலம். அமைதியான தெருக்கள் முதல் பிரமிக்க வைக்கும் காட்சிகள் வரை டிசம்பரில் இந்தியாவினுள் பார்வையிட இது ஒரு அற்புதமான இடமாகும்.
பனிப்பந்து-சண்டை, மலையேற்றம், பனிச்சறுக்கு உட்பட குஃப்ரியில் ஈடுபட ஏராளமான சாகச விளையாட்டுகள் இருக்கின்றன.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]