Perfect Island Wedding : திருமணம் செய்வதற்கு இந்தியாவில் உள்ள அழகான தீவுகள்

சமீப காலமாக தீவுகளில் திருமணம் செய்வது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. நீங்களும் தீவில் திருமணம் செய்ய விரும்புகிறீர்களா ? இதோ உங்களுக்கான இடங்கள் 

Amazing islands to get married

இந்தியாவிலேயே பிரமிக்க வைக்கும் பல்வேறு இடங்கள் இருக்கும் போது ஏன் வெளிநாடுக்கு சென்று தேனிலவு கொண்டாட வேண்டும் ? அங்கு இருக்கும் இடங்களை விட மிகவும் அழகான இடங்களை இந்தியாவினுள் பாதி செலவிலேயே சுற்றிப் பார்க்கலாம். பிரதமர் மோடியும் அண்மையில் இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார். இது இந்திய பொருளாதாரத்திற்கும் உதவுகிறது.

திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில், பல வர்த்தக நிறுவனங்கள் இந்த ஆண்டு ₹5 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் என மதிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மிகவும் பணக்கார குடும்பங்கள் வெளிநாடுகள் சென்று திருமண கொண்டாட்டங்களில் ஈடுபடுவது ஒருவகையில் இந்தியர்களின் வணிகத்தை பாதிக்கிறது. எனவே கொண்டாட இடங்களைத் தேர்வு செய்யும் போது தம்பதிகள் இந்தியாவில் உள்ள இடங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பிரதமர் தெரிவித்தார்.

தீவுகள் திருமண நிகழ்ச்சிகளுக்கும், தேனிலவு செல்வதற்கும் உகந்த இடமாகும். மேலும் அற்புதமான அனுபவத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் பல தீவுகள் உள்ளன. அதில் பிரபலமான சில தீவுகள் பற்றி இங்கே பகிர்ந்துள்ளோம்.

போர்ட் பிளேர்

Port Blair

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேர் திருமண நிகழ்விற்கு ஒரு அற்புதமான இடமாகும். திருமணத்தை ஒரு கடற்கரை ரிசார்ட்டில் வைத்து சுவையான கடற்கரை விருந்துடன் திருமணத்தை நடத்திடலாம். நீங்கள் சில செய்திகளில் கூட பார்த்திருக்கலாம். இங்கே தம்பதிகள் திருமணங்களைச் செய்திருக்கிறார்கள். மேலும் படகில் சென்று சுற்றி பார்ப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றனர். படகில் அமர்ந்தபடி விருந்தும் சாப்பிடலாம்.

மன்ரோ தீவு

கடவுளின் தேசமான கேரளாவில் திருமணம் செய்து கொள்வதை விட வேறு சிறப்பு ஏதும் இருக்க முடியுமா ? கொல்லம் மாவட்டத்தில் உள்ள எட்டு தீவுகளின் தொகுப்பான மன்ரோ தீவு அதன் நிகரற்ற அழகுக்காகப் பெயர்பெற்றது மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு அமைதியான பின்னணியை கொண்டது. இங்குள்ள தீவுகளை ரசித்திட நீங்கள் படகு வாடகைக்கு எடுக்கலாம்.

மேலும் படிங்கSnowfall Destinations : பனிப்பொழிவை அனுபவிக்க உதவும் டூர் பிளான்

டையூ தீவு

Diu Islands

இனிமையான வானிலை, பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை மற்றும் தனித்துவமான போர்த்துகீசிய கலாச்சாரத்தின் கலவையுடன் திருமணம் நடத்த விரும்பினால் அதற்கு டையூ தீவு சிறந்த இடமாகும். குஜராத்தின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள கத்தியவார் தீபகற்பத்தின் கடற்கரை மணல், அலைகள் மற்றும் அமைதியான சூழல் ஆகியவை உங்கள் திருணமத்தை மறக்க முடியாத நாளாக்கி விடும்.

லட்சத் தீவுகள்

குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்களுடன் நீங்கள் திருமணத்தை நடத்த விரும்பினால் அதற்கு லட்சத்தீவு தீவு சரியான இடமாகும். இங்குள்ள பங்காரம், மினிகாய், அகத்தி, கவரட்டி, கல்பேனி அல்லது கத்மத் தீவுகளில் திருமணங்கள் செய்து கொள்ளலாம்.

ஹேவ்லாக் தீவு

Havelock Island

நீலநிறப் பெருங்கடல்கள், பிரகாசமான வானம், பனை மரங்கள் மற்றும் தங்க மணல் கடற்கரைகளால் சூழப்பட்ட ஹேவ்லாக் தீவு கடற்கரையோர திருமணங்களுக்குப் பிரபலமான இடமாகும். அழகான வானிலை மற்றும் நிதானமான சூரிய ஒளியின் மத்தியில் நடைபெறும் காதல் திருமணங்கள் சிறந்த அனுபவத்தைத் தரும். திருமணத்திற்கு வரும் விருந்தினர்களும் எலிஃபண்ட் பீச் மற்றும் ராதாநகர் கடற்கரையில் சில நீர் சாகசங்களில் ஈடுபடலாம்.

மேலும் படிங்கBengaluru Tourism - பெங்களூருவின் பிரபலமான சுற்றுலா தலங்கள்

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP