என்டர்டைன்மெண்ட் செய்தியில் நம்மை எப்போதும் பரபரப்புடன் வைத்திருக்கும் முக்கிய பொழுதுபோக்கு ரியாலிட்டி சோக்களில் பிக்பாஸ் முக்கிய பங்கு வைக்கின்றது. நூறு நாட்கள் ஒரு வீட்டில் தங்கி பிரபலங்கள் அவர்களுக்கு இருக்கும் டாஸ்குகள் மற்றும் மன அழுத்தங்கள் புது இடம் மனிதர்கள் ஆகியோரை எவ்வாறு சமாளிப்பது என்பதுதான் டாஸ்க் இது மிகக் கடினமான ஒன்று ஆகும். கடினமான 100 நாட்களில் பொறுமை மற்றும் நிதானம், சமாளித்தல், சரியாகச் செயல்படுதல் போன்ற யுக்திகளை வைத்து ஆறு சீசன்களை பிக் பாஸ் கடந்துவிட்டது.
பிக்பாஸ் சீசன் 7 பிரமோ பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸில் இரண்டு வீடுகள் இந்த முறை இருப்பதாகப் பேசப்பட்டு வருகின்றன. 7 ஆம் சீசனில் யார் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பேசி வருகின்றனர். செலிபிரட்டிகள் குறித்த சில தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கின்றன. நமக்குக் கிடைத்த தகவல்கள் இங்குக் கொடுத்துள்ளோம்.
பிக்பாஸ் வீட்டில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அந்தப் பரபரப்பான சூழ்நிலையைச் சமாளிக்கும் பக்குவத்தை செலிபிரிட்டிகள் வைத்திருக்க வேண்டும். பிக்பாஸ் 7 சீசனில் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. அதற்கான விடைகளும் கிடைத்து இருக்கின்றது. நடிகர் அப்பாஸ், பிரித்விராஜ், வனிதா மகள் ஜோவிகா, ரோபோ சங்கர் மகள் இந்திரஜா மற்றும் ஷர்மிளா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. இதில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான்.
மேலும் படிக்க: சீரியல் நடிகை ரவீணாவின் வைரல் போட்டோஸ்!
இந்த முறை இரண்டு வீடு என்பதால் எது எப்படி என்ற குழப்ப நிலைகளும், எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. சுவாரசியமான நிகழ்வுகளும் போட்டா போட்டிகளும் நடக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றன பிக்பாஸில் பங்கேற்கும் நடிகர்கள் தங்களுக்கு என்று தனித்துவத்தை நிச்சயம் பின்பற்றுவார்கள் அது அவர்களை வைரல் ஆக்கும்.
பிக்பாஸ் நாயகர்கள் பட்டியலில் வனிதாவின் மகள் ஜோவிகா இவருக்கு வனிதா தக்க ட்ரைனிங் கொடுத்து இருப்பார் என்று நம்பலாம். தனக்கு பின் தன் பிள்ளை சொந்த கால நிற்க வேண்டும் அதற்குப் பாப்புலராக வேண்டும். இந்தப் பிக்பாஸ் ஷோவை பயன்படுத்திக் கொள்ள ஆயத்தமாகிவிட்டார் ஜோவிகா நல்லது நடந்தால் சரி. மேலும் வனிதா தங்கை ஸ்ரீதேவி விஜயகுமார் வந்தால் குடும்ப இணைப்பு ஏற்படுமோ என்ற ஆவல் ஒருபக்கம் இருக்கும்.
மேலும் படிக்க::சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் கியூட் செல்ஃபீஸ்!
பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிக்கும் கதிர் கேரக்டர் குமரன் இந்தப் பிக்பாஸில் பங்கேற்கிறார் இவர் சிறப்பான நடிகர் ஜோடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார் தனக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று பிக்பாஸில் நுழைகின்றார்.
ரோபோ சங்கர் மகள் இந்திரஜா பிக்பாஸ் சீசன் 7 பங்கேற்கிறார் அவர் ஏற்கனவே ஜி டிவியில் நடைபெற்ற ரியாலிட்டி சோவிலும் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த முறை பிக்பாஸிலும் கால் பதித்து தனக்கான இடத்தையும் தக்க வைக்க முயற்சிப்பார் இந்திரஜா. நமக்கு நல்ல ஒரு கில்லி என்டர்டைன்மென்ட் ஆக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
தொகுப்பாளனி ஜாக்குலின் இவரும் பிக்பாஸ் சீசன் செவனில் பங்கேற்க இருக்கிறார். இவருக்கு இந்தச் சீசன் கம்பேக்காக இருக்கும்
பிக்பாஸ் சீசன் 7 பாலாஜி மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சத்யா அத்துடன் மாகாபா ஆனந்த், பப்லு, பிரிதிவிராஜ் அர்ச்சனாபெயர்களும் அடிபடுகின்றன. நடிகர் விஷ்ணு மற்றும் ரக்சன் ஆகியோரும் இங்குக் களமிறங்க உள்ளார்கள் என்ற தகவலும் கிடைத்திருக்கின்றது.
மேலும் படிக்க: ஸ்பெஷல் வேண்டுதல்.. மனைவியுடன் திருவண்ணாமலை சென்ற நடிகர் ஹரிஷ் கல்யாண்
ஆரம்பிக்கலாமா என்ற விக்ரம் பாணியில் பிக்பாஸ் சீசன் 7 கலைக்கட்ட தொடங்கி விட்டது இரண்டு வீடுகள் என்பதால் மக்களுக்கு நல்ல கொண்டாட்டமும் பொழுதுபோக்கும் இன்னும் நூறு நாட்களுக்கு அசைபோட இரண்டு வீடுகளும் கிடைத்துவிட்டது. இனிமேல் பிக்பாஸ் சீசன் ஜுரம் அனைவருக்கும் தொற்றிக் கொள்ளும். இனிமேல் வாரவாரம் நமது வீட்டில் பிக்பாஸ் பஞ்சாயத்துக்கள் ஓட ஆரம்பிக்கும்.
நான் சரி, நீ சரி என்று ஒவ்வொருவரும் தங்களது பங்கில் தக்கத்திமி ஆடுவார்கள், அவர்களை வேடிக்கை பார்க்கும் நாமும், நமது பங்கிற்கு வைத்துச் செய்வோம். ஆக மொத்தம் இந்தச் சீசன் அமர்க்களமாக இருக்கும் என்று பேசப்படுகின்றது. ஏற்கனவே விஜய் டிவிக்கு எதிர்நீச்சல் டிஆர்பி குடைச்சல் இருக்கின்றது. அதனைச் சரி செய்ய நிச்சயம் விஜய் டிவி மெனக்கெடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. பாப்போம் இந்த முறை யார் பத்த வைக்கும் ஆளாக இருப்பார்கள் யார் சில்லுனு இருப்பார்கள் என்று நிகழ்ச்சியில் தெரியவரும்.
Image credit: Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation