
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுபவர் ஹரிஷ் கல்யாண். எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் தனது விடா முயற்சியினால் ஹீரோவானார். தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக ஹரிஷ் கல்யாணுக்கு பெண் ரசிகைகள் ஏராளம். இவர் நடிக்கும் படங்களும் இளைஞர்களை சார்ந்ததாக அதிகம் இருக்கும். சமீபத்தில் ஹரிஷ் கல்யாண நடிப்பில் வெளியான LGM திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தை தோனியின் மனைவி சாக்ஷி தயாரித்து இருந்தார்.
கிரிக்கெட் வீரர் தோனி தொடங்கியயுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் முதல் ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான். இது தனது கெரியரில் மறக்க முடியாத தருணம் என ஏற்கெனவே பல பேட்டிகளில் ஹரிஷ் கூறியுள்ளார். இவரின் நடிப்பில் அடுத்த வருடம் தொடர்ந்து 4 படங்கள் திரைக்கு வரவுள்ளன. அதிலும் குறிப்பாக ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள த்ரில்லர் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் நடிகர் ஹரிஷ் கல்யாண், திடீரென்று திருவண்ணாமலை கோயிலுக்கு தனது மனைவியுடன் சென்று இருக்கிறார்.
ஹரிஷ் கல்யாணுக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் நர்மதா உதயகுமாருடன் திருமணம் நடைப்பெற்றது. இவர்களின் திருமணத்திற்கு வெள்ளித்திரை பிரபலங்கள் திரண்டு சென்றிருந்தனர். திருமணத்திற்கு பிறகு இன்னும் அதிக கவனத்துடன் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஹரிஷ். இந்நிலையில் கூடிய விரைவில் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடவுள்ள இந்த ஜோடி, அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளனர்.

ஹரிஷ் கல்யாண்- நர்மதா திருவண்ணாமலை கோயிலுக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.இதை பார்த்த ரசிகர்கள் அட்வான்ஸாக அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்களையும் கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.
இதுப்போன்ற சினிமா பதிவுகளுக்கு மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Instagram
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]