பாலிவுட்டில் முன்னணி நடிகையாக ஆலியா பட் வலம் வருகிறார். ஆலியா பட் - ரன்பீர் 5 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து பின்பு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ராஹா என்ற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. ரன்பீர், ஆலியா இணைந்து பிரம்மாஸ்திரா என்ற படத்தில் நடித்தனர். இந்த திரைப்படம் மிகுந்த வெற்றி பெற்றது.
ஆலியா பட் பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். குழந்தை பிறந்த பின்பு சில மாதங்கள் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார். சமீபத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி ‘ என்ற படம் வெளியானது.
ஆலியா பட் ஹாலிவுட் படமான ‘ தி ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.இந்த படம் நெட்ஃபிளிக்ஸில் இருக்கிறது. படங்கள் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராம், யூடியூப் என அனைத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்த பதிவும் உதவலாம் : இணையத்தில் வைரலான புகைப்படம்! ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த எமி ஜாக்சன்..
இந்நிலையில் ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் பூனேவில் உள்ள ஆடம்பரமான சொகுசு வீட்டில் குடியேறி இருக்கின்றனாராம். இதன் ஒரு மாத வாடகை ரூ.4 லட்சமாம். மேலும் இரண்டாவது வருடம் ரூ.4.2 லட்சம் , மூன்றாவது வருடம் ரூ.4.4 லட்சம் என வாடகையை உயர்த்தி கொடுக்கவும் ஒப்பந்தம் போட்டுள்ளனர். ரன்பீர், ஆலியா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றையும் கட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]