
நடிகை எமி ஜாக்சன் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தாண்டவம், தெறி, தங்கமகன், 2.0 ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார். எமி ஜாக்சன் தற்போது அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.இந்த படத்தில் கதாநாயகனாக அருண் விஜய் நடித்திருக்கிறார்.இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைப்பெற்று வருகின்றன.
நடிகை எமி ஜாக்சனுக்கு ஒரு மகன் இருக்கிறார்.அடிக்கடி தனது மகனுடன் கியூட்டாக எடுத்துக்கொள்ளும் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வார். சமீபத்தில் எமி ஜாக்சன் தனது போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கினார்கள்.
எமி ஜாக்சன் இதில் பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட மாடர்ன் உடையை அணிந்துள்ளார். உடைக்கு ஏற்றமாதிரி ஹேர் ஸ்டைல் மற்றும் மேக்கப் செய்திருந்தார். எமி ஜாக்சனின் இந்த லுக்கை ஓப்பன்ஹெய்மர் நடிகர் சிலியன் மர்பியுடன் ஒப்பிட்டு கமெண்ட் செய்து வந்தனர்.இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம் : ’நேஷ்னல் க்ரஷ்’ ராஷ்மிகாவின் வைரல் க்ளிக்ஸ்..

‘தான் ஒரு ஆங்கில படத்தில் நடித்து வருகிறேன்.அந்த படத்திற்காக ஒல்லியாக வேண்டி இருந்தது. என்னை பற்றி இணையத்தில் உலா வரும் விமர்சனங்கள் சோகத்தை அளிக்கிறது. நடிகர்கள் பலரும் படங்களுக்காக அவர்களது தோற்றத்தை மாற்றிக்கொள்வதை நான் பாத்திருக்கிறேன்.அதற்காக அவர்களை பாராட்டுகிறார்கள்.ஆனால் ஒரு நடிகை செய்தால் இப்படி விமர்சனம் செய்கிறார்கள்’என்று கூறியுள்ளார்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]