herzindagi
basan face pack for women

Oily Skin: குளிர்காலத்திலும் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பா? இந்த பேஸ் பேக் யூஸ் பண்ணிப்பாருங்க!

<span style="text-align: justify;">குளிர்காலத்தில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் உடலில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியாகிறது.&nbsp;</span>
Editorial
Updated:- 2024-01-31, 16:16 IST

பெண்கள் என்றாலே அழகின் மறு உருவம் என்பார்கள். எப்போதுமே முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்குத் தெரிந்த சில அழகுக் குறிப்புகளைப் பின்பற்றுவார்கள். ஆனாலும் அனைத்துப் பருவ காலங்களிலும் ஒர்க் அவுட் ஆகாது. அதிலும்  குளிர்ந்த மற்றும் வறண்ட காற்றினால் சருமத்தில் ஈரப்பதம் இல்லாமல் போய்விடும். இதோடு சருமத்தில் அதிக எண்ணெய் படிந்து சருமம் பொலிவிழந்துவிடும். மேலும் இந்த பருவக்காலத்தில் சருமம் வறண்டும் முக பொலிவின்றி  தோற்றமளிக்கும். ஒரு சிலருக்கு எண்ணெய் படிந்து முகம் பொலிவு இழந்துவிடும். இன்றைக்கு குளிர்காலத்தில் ஏற்படும் எண்ணெய் சருமத்தைப் பொலிவாக்க என்ன பேஸ் பேக்குகளை உபயோகிக்கலாம்? என்பது குறித்த விபரங்களை இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.

facial tips

குளிர்காலத்திற்கான பேஸ் பேக்:

மேலும் படிங்க: பெண்களின் முகத்தைப் பொலிவாக்க உதவும் கிவி பழம்..!

  • எண்ணெய் சருமத்திற்கு குளிர்காலத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சிறந்த தேர்வாக அமையும். தேங்காய் எண்ணெய்யுடன் ஒரு சொட்டு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். குறைந்த 20 நிமிடங்களாவது இந்த பேஸ் பேக்கை முகத்தில் வைத்திருக்கவும். இது சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சருமத்தை பொலிவாக்குகிறது.
  • அடுத்ததாக குளிர்காலத்தில் எண்ணெய்  பசை சருமத்திற்கு முல்தானி மெட்டி சிறந்தது என அழகு கலை வல்லுநர்கள் கூறுகின்றனர். ரோஸ் வாட்டருடன் முல்தானி மெட்டியைக் கலந்து பேஸ் பேக்காக பெண்கள் பயன்படுத்தலாம். இறந்த செல்களை அகற்றி, சருமத்தை எண்ணெய் பிசுபிசுவின்றி வைப்பதற்கு உதவியாக இருக்கும். காலையில் ஃபேஸ் வாஷ் அல்லது சோப்பைக் கொண்டு சுத்தம் செய்த பிறகு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை முல்தானி மெட்டி பேஸ் பேக் கொண்டு  ஸ்க்ரப் செய்யவும்.
  •  எண்ணெய் சருமத்திற்கு மஞ்சள் பேஸ் பேக் பயன்படுத்தலாம். மஞ்சள் தூள், சந்தன தூள் மற்றும் பால் அல்லது தண்ணீர் கலந்து முகத்தில்  அப்ளை செய்யவும். மஞ்சள் கிருமிநாசினியாக செயல்படுவதால் முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.
  •  மேலும் மஞ்சள் தூளுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர்  சேர்த்து பேஸ் பேக்காகப் பயன்படுத்தவும். வாரத்திற்கு இரண்டு முறையாவது நீங்கள் முகத்திற்கு இந்த பேஸ் பேக்கை உபயோகித்தால் சருமம் ஈரப்பதமாக இருக்கும்.

மேலும் படிங்க: புதிதாக சேலைக்கட்டும் பெண்களுக்கான ப்ரீ ப்ளிடிங் டிப்ஸ்!

glow skin

குளிர்காலத்தில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் உடலில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியாகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்றால் கடலை மாவு பேஸ் பேக்கை நீங்கள் உபயோகப்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள எண்ணெய்யை உடனடியாக உறிஞ்சி, ஒரே நேரத்தில் சருமத்தை சுத்தப்படுகிறது. மேலும் சருமத்தில்  pH சமநிலையை பராமரிக்கவும், அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சவும் உதவுகிறது.

 

Image Credit: 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]