herzindagi
image

முகத்தின் அழகைக் கெடுக்கும் கரும்புள்ளிகள், நிறமிகளைப் போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்

முகத்தில் புள்ளிகள் இருந்தால் அழகையே மொத்தமாகக் கெடுத்துவிடும், இவற்றை எந்த வகையிலும் அகற்ற முடியவில்லை என்றால், விட்டி இருக்கும் இந்த பொருட்களைப் பயன்படுத்தினால் உடனடியாக நிவாரணம் தரும் 
Editorial
Updated:- 2025-02-28, 11:19 IST

நமது முகம் நமது அடையாளம், எனவே நாம் நமது முகத்தின் மீது அதிக கவனம் செலுத்துகிறோம். இருப்பினும், நாம் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், ஒரு சிறிய அலட்சியம் கூட நமது முழு முகத்தையும் கெடுத்துவிடும். குறிப்பாக எந்த காரணத்தாலும் முகம் கருமையாகிவிட்டால், முகத்தின் அழகு பாதிக்கப்படத் தொடங்குகிறது. முகத்தில் பரு, புள்ளிகள் அல்லது காயம் ஏற்பட்ட பிறகு, அந்த இடத்தில் கருமை தோன்றும். இந்த கருமை எளிதில் மறைவதும் இல்லை, வெளிர் நிறமாக மாறுவதும் இல்லை. நீங்கள் அதை ஒப்பனை மூலம் மறைக்கலாம், ஆனால் அதற்கு முறையாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இந்த புள்ளிகள் முகத்தில் என்றென்றும் இருக்கும்.

 

மேலும் படிக்க: மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிறு வலிக்கு மாத்திரை எடுத்துக்கொள்வது தீங்கு விளைவிக்குமா?

இந்தப் புள்ளிகள் மெலனின் எனப்படும் நிறமியால் ஏற்படுகின்றன. வயது அதிகரிக்கும் போது இந்த நிறமியும் உருவாகத் தொடங்குகிறது. குறிப்பாக நீங்கள் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் வெயிலில் வெளியே சென்றால், மெலனின் காரணமாக முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றத் தொடங்குகின்றன.சந்தையில் பல தோல் பராமரிப்புப் பொருட்களைக் காணலாம், ஆனால் அவை மிகவும் பயனுள்ளதாக இருக்காது, மேலும் அவற்றின் அதிக விலை காரணமாக வாங்கி பயன்படுத்த முடியாது. எனவே, சருமத்தில் உள்ள மெலனின் நிறமியைக் குறைத்து முகத்தை கறையற்றதாக மாற்றும் சில வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.

 

பால்


பால் ஒரு சிறந்த இயற்கை எக்ஸ்ஃபோலியேட்டர். தினமும் அதைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்து வந்தால் முகத்தில் உள்ள இறந்த சருமத்தின் அடுக்கு நீக்கப்படும், மேலும் இறந்த சருமத்தால் முகத்தில் உள்ள கருமையும் நீங்கும்.

milk

 

மஞ்சள்

 

மஞ்சளில் இயற்கையான ப்ளீச் உள்ளதால் சருமத்தின் நிறத்தை பிரகாசமாக்கப் பயன்படுத்தலாம். முகத்தில் தழும்புகள் இருந்தால், மஞ்சள் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து தடவவும். இது முகத்தில் உள்ள கருமையைக் குறைக்கும். மஞ்சள் கிருமி நாசினியாகவும் உள்ளதால் முகத்தில் ஏதேனும் காயம் இருந்தால் குணப்படுத்தும்.

 

தயிர்

 

தயிர் ஒரு இயற்கை எக்ஸ்ஃபோலியேட்டர், அதிலிருந்து நீங்கள் ஒரு ஸ்க்ரப் தயாரிக்கலாம். தயிரில் ரவையை கலந்து 10 நிமிடங்கள் ஒதுக்கி வைக்கவும், ரவை சிறிது வீங்கியதும், அதைக் கொண்டு உங்கள் முகத்தை ஸ்க்ரப் செய்யவும். இது உங்கள் முகத்தில் உள்ள புள்ளிகளையும் நீக்கும். தயிர் உங்கள் முகத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது.

curd

கற்றாழை ஜெல்

 

கற்றாழை ஜெல்லை தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டரில் கலந்து முகத்தில் தடவலாம். இது முகத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும், மேலும் கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது. கற்றாழை ஜெல்லையும் கொண்டு முகத்தை டோன் செய்யலாம்.

 

ஆரஞ்சு

 

ஆரஞ்சுகளில் வைட்டமின் சி உள்ளதால் முகத்தின் நிறத்தை தெளிவாக்குகிறது. முகத்தில் தழும்புகள் இருந்தால், அவையும் குறையும். ஆரஞ்சு சருமத்தை ஈரப்பதமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும். இது முகத்தின் சருமத்தை மென்மையாக வைத்திருக்கும்.

Vitamin C

 

தேன்

 

தேனில் இயற்கையான ப்ளீச் உள்ளதால் முகத்தில் தடவுவது வறட்சியை நீக்குகிறது. தினமும் முகத்தில் தேனைப் பூசினால் முகம் பிரகாசமாகி பளபளப்பாக்க செய்கிறது.

 

உருளைக்கிழங்கு

 

உருளைக்கிழங்கு சாறு சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உருளைக்கிழங்கு தோலை முகத்தில் தேய்ப்பாதால் பளபளப்பைக் கொண்டுவரும். முகத்தில் டானிங் பிரச்சனை இருந்தாலோ அல்லது புள்ளிகள் மற்றும் தழும்புகள் இருந்தாலோ, உருளைக்கிழங்கு தோலை முகத்தில் தடவுவது முகம் சுத்தமாக இருக்கும்.

 

வெள்ளரிக்காய்

 

வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்கை தயாரித்து முகத்தில் தடவலாம். வெள்ளரிக்காயை அரைத்து அதில் ரோஸ் வாட்டர் கலந்து கொள்ளவும். பின்னர் இந்த கலவையை முகத்தில் 10 நிமிடங்கள் தடவி வரவேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் உங்கள் முகத்தில் தடவினால், உங்கள் முகம் அற்புதமான பளபளப்பைப் பெறும்.

cucumber

பப்பாளி

 

பப்பாளி சருமத்திற்கும் மிகவும் நல்லது. பப்பாளியை ஐஸ் தட்டில் உறைய வைத்து பின்னர் உங்கள் முகத்தில் தடவலாம். இது உங்கள் முகத்தில் உள்ள புள்ளிகளை ஒளிரச் செய்யும் மற்றும் உங்கள் முகத்தில் பளபளப்பைக் கொண்டுவரும்.

 

தர்பூசணி

 

தர்பூசணி சாற்றில் இருந்து நீங்கள் ஃபேஷியல் டோனரை உருவாக்கலாம். இது உங்கள் முகத்திற்கு பளபளப்பைக் கொண்டுவருவதோடு, டானிங்கையும் குறைக்கும். முகம் பளபளப்பாக மாற தொடங்கும், மேலும் தோல் முன்பை விட மென்மையாக மாறும்.

 

மேலும் படிக்க:  இந்த பானங்கள் குடிப்பதால் நீரிழிவு, யூரிக் அமிலம் மற்றும் உடல் கொழுப்பு அனைத்திற்கு குட் பாய் சொல்லும்


குறிப்பு- உங்கள் சருமம் உணர்திறன் மிக்கதாக இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள எந்தவொரு தீர்வையும் முயற்சிக்கும் முன், ஒரு முறை பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். எந்த மருந்திலிருந்தும் உங்களுக்கு உடனடி பலன்கள் கிடைக்காது. இந்த வைத்தியங்கள் உங்கள் சருமத்தின் நல்ல ஆரோக்கியத்திற்கு மட்டுமே.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]