herzindagi
make up tricks for ladies

மேக் அப்பை விரும்பாத பெண்களுக்கான சீக்ரெட் ப்யூட்டி டிப்ஸ்!

<span style="text-align: justify;">ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்தால் மட்டுமே மேக் அப் இல்லாமலும் முகம் அழகாக தெரியும்.</span>
Editorial
Updated:- 2024-03-07, 16:25 IST

பெண்களில் பெரும்பாலோனார் தங்களை அழகாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல மெனக்கெடுவார்கள். அழகு நிலையங்களுக்குச் செல்வது முதல் கடைகளில் விற்பனை செய்யப்படும் பல காஜல், மஸ்காரா, பவுன்டேஷன், ஐலைனர், லிப் லைனர், ரோஸ் பவுடர் என பல அழகு சாதனப் பொருள்களை வாங்கி தங்களை அழகாக்கிக் கொள்வதற்கு முயற்சி செய்வார்கள். ஆனால் ஒரு சில பெண்களுக்கு மேக் அப் போடுவது சுத்தமாகப் பிடிக்காது. எப்பொழுதுமே சிம்பிளாக  இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இதே போன்று நீங்களும் மேக் அப்பை விரும்பாத பெண்களாக இருந்தால் இந்த தகவல்கள் நிச்சயம்  உங்களுக்கு உபயோகமாக இருக்கும். இதோ என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளவும்.

glowing skin Naturally for women

மேக்அப் இல்லாமல் அழகாவதற்கான டிப்ஸ்கள்:

மேலும் படிக்க: வெறும் 20 நிமிடங்களில் முகம் பொலிவாக இதை பின்பற்றுங்கள்!

  • தண்ணீர் குடித்தல்: உங்களது உடலை எப்போதும் நீரேற்றுடன் வைத்திருந்தால் சருமத்தில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது. குறிப்பாக வெயில் காலத்தில் நீர்ச்சத்து குறையும் போது சருமம் வறண்டு விடக்கூடும் என்பதால் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • புருவங்களைத் திருத்துதல்: பெண்களின் முகத்திற்கு கூடுதல் அழகு சேர்ப்பது அவர்களின் புருவ அழகுதான். உங்களால் முடிந்தால் அழகு நிலையங்களுக்கு சென்று புருவங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு அடர்த்தியான புருவம் இல்லையென்றாலும், கண் மைகளைப் பயன்படுத்தி புருவத்தின் அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
  • சரும பராமரிப்பு: குளிர்காலமாக இருந்தாலும், வெயில் காலமாக இருந்தாலும் சரும பராமரிப்பில் அக்கறை காட்ட வேண்டும். சருமத்தில் எவ்வித பிரச்சனைகள்,  அரிப்பு போன்றவை ஏற்படாமல் இருப்பதற்காக எண்ணெய் மற்றும் சீரம் பயனபடுத்தவும். அதே சமயம் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

hair style

  • ஹேர் ஸ்டைல்: விதவிதமான மேக் அப்களை விரும்பாத பெண்கள், சிகை அலங்காரத்திலும் அவர்களின் அழகை மேம்படுத்திக் கொள்ளலாம். ஆடைகளுக்கு ஏற்ற விதவிதமான ஜடைகள், பூக்கள் போன்றவற்றை வைத்து உங்களை அழகாக்கிக்கொள்ள முடியும்.
  • உடைகளில் கவனம்: உங்களின் உடல் அமைப்பிற்கு ஏற்ற உடைகளை அணிவது உங்களை அழகாக காட்டும். அதே சமயம் திருமணம், பிறந்த நாள் விழா போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற சிறப்பான ஆடைகளை அணியவும்.
  • உதடு பராமரிப்பு: எவ்வித மேக் அப் விரும்பாத பெண்கள் உதடுகளில் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். உதடு வெடிப்பு, உரிதல் போன்ற பிரச்சனையிலிருந்து தப்பிக்க எப்போதும் உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும். நல்ல லிப் பாம்  மட்டும் உபயோகிக்கலாம்.
  • மகிழ்ச்சியுடன் இருத்தல்: ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்தால் மட்டுமே முகம் அழகாக தெரியும். சோகங்களை மறந்து மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு முயற்சி செய்ய பழகுங்கள்.

மேலும் படிக்க: முகம் பளபளப்பாக தயிரை இப்படி யூஸ் பண்ணிப்பாருங்க!

  • தூக்கம்: சரியான தூக்கம்  இல்லையென்றால் முதலில் கண்களை சுற்றி கருவளையம் போன்ற பாதிப்புகளை  ஏற்படுத்தும். எனவே ஒரு நாளைக்கு 7-8 மணி நேரமாவது தூக்கத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

happy moment

  • இயற்கை அழகு சாதனப் பொருள்கள்: கடைகளில் விற்பனை செய்யப்படும் விதவிதமான அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்த பிடிக்கவில்லையென்றால், மஞ்சள், தயிர், வெண்ணெய், எலுமிச்சை, பீட்ரூட், பப்பாளி போன்ற இயற்கை அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தி எப்போதும் அழகாக இருக்க முயற்சி செய்யவும்.

 Image source - Google

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]