herzindagi
yogurt skin care

Yogurt For Skincare: முகம் பளபளப்பாக தயிரை இப்படி யூஸ் பண்ணிப்பாருங்க!

<p style="text-align: justify;"><span style="text-align: justify;">&nbsp;தயிர் பேஸ் மாஸ்க்கை முதலில் லேசாக தடவிப்பார்க்கவும். ஏதேனும் அலர்ஜி ஏற்பட்டால் தயிர் பேஸ் மாஸ்க்கைத் தவிர்க்கவும்.</span>
Editorial
Updated:- 2024-03-06, 16:41 IST

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் பல சரும பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். என்ன தான் பல அழகு சாதன பொருள்களைப் பயன்படுத்தினாலும் கோடை கால சரும பராமரிப்பில் கட்டாயம் இயற்கை மூலப்பொருளான தயிரை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் சருமத்தை எப்போதும் பொலிவாக வைத்திருக்க உதவியாக இருக்கும். இதோ சரும பராமரிப்பில் தயிரை எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.

curd face mask

மேலும் படிக்க: கொரியன் பெண்கள் போன்று பளிங்கு முகம் வேண்டுமா? கொஞ்சம் இதை ட்ரை பண்ணுங்க!

சரும பராமரிப்பிற்கு உதவும்  தயிர்:    

  • தயிர் மற்றும் தேன்: தயிருடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பேஸ் பேக் போன்று உபயோகிக்கவும். 10 முதல் 15 நிமிடங்களுக்கு பின்னர் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தைக் கழுவவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை ஹைட்ரேட செய்து முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
  • தயிர் மற்றும் ஓட்ஸ் மீல்: ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் ஓட்மீலைக் கலந்துக் கொண்டு முகத்தில் அப்ளை செய்யவும். பின்னர் ஸ்கரப் போன்று முகத்தில் தேய்த்துவிட்டு  10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் போதும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவியாக உள்ளது.

curd and honey

  • தயிர் மற்றும் வெள்ளரி: முதலில் வெள்ளரிக்காயைத் துருவிக் கொண்டு ஒரு டேபிள் ஸ்பூன் தயிருடன் கலந்துக்கொள்ளவும்.  இதை கண்களுக்கு கீழ் தடவிக் கொண்டு 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் போதும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் உள்ள வீக்கம் மற்றும் கருவளையத்தைக் குறைக்க உதவுகிறது.
  • தயிர் மற்றும் எலுமிச்சை: தயிருடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். இந்த பேஸ் பேக் சருமத்தில் உள்ள PH அளவை சமன் செய்து, முகத்தை பளபளப்பாக்குகிறது.
  • தயிர் மற்றும் கற்றாழை: சருமத்தைப் பராமரிக்க கற்றாழை உங்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். கற்றாழை ஜெல்லுடன் தயிரைக் கலந்து முகத்தில் அப்ளை செய்வதால் கோடைக்காலத்தில் சருமத்தில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்க உதவுகிறது. 

மேலும் படிக்க: சுட்டெரிக்கும் கோடை வெயில்;உடல் சூட்டைத்தணிக்க உதவும் குளிர்பானங்கள்!

curd facial

இது போன்று தயிரை பல வகைககளில் உங்களது சருமத்தைப் பராமரிக்க உபயோகிக்கலாம். ஒருவேளை உங்களுக்கு ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில் தயிர் பேஸ் மாஸ்க்கை முதலில் லேசாக தடவிப்பார்க்கவும். ஏதேனும் அலர்ஜி ஏற்பட்டால் தயிர் பேஸ் மாஸ்க்கைத் தவிர்க்கவும். இல்லையென்றால் உங்களது சருமத்திற்கு மேற்கூறியுள்ள எந்த பொருள்கள் ஏற்றதாக அமையுமோ? அதைப் பயன்படுத்திக் கொண்டு கோடைக்காலத்திலும் சருமத்தைப் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.

Image Source- Google

 

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]