herzindagi
banana peel for foot image

Soft Feet: மெத்து மெத்துன்னு கால் பாதங்கள் அழகாய் இருக்க வாழைப்பழத் தோலில் சூப்பர் டிப்ஸ்!!

மழைக்காலத்தில் கை, கால்களில் வறட்சி அடிக்கடி ஏற்படும். பாதத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க  வாழைப்பழ தோலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம். 
Editorial
Updated:- 2023-08-18, 15:39 IST

மழைக்காலத்தில் குதிகால், முழங்கைகள், உள்ளங்கைகள் போன்ற இடங்களில் வறட்சி தோன்றத் தொடங்குகிறது. இந்த நாட்களில் குதிகால் வெடிப்புக்கு வாழைப்பழத்தோல் உங்களுக்கு உதவும். வாழைப்பழத் தோல்களில் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்ற உதவும்.

வாழைப்பழத் தோலில் அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள்-ஏ, பி, சி மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ளதால் வறண்ட மற்றும் அரிப்பு சருமங்களில் பல அதிசயங்களைச் செய்கின்றது. கால் பராமரிப்புக்கு வாழைப்பழத் தோலை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். 

 

இந்த பதிவும் உதவலாம்: வாயை சுற்றியிருக்கும் கருமையை நீக்க செம்மையான டிப்ஸ்

வறண்ட சருமத்திற்கு வாழைப்பழத் தோல்

வாழைப்பழத்தில் அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளதால் வறண்ட சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளதால் சிறந்த மாய்ஸ்சரைசராக இருக்கிறது.

தேவையான பொருள்கள்

  • 1 வாழைப்பழத் தோல்
  • 1 பியூமிஸ் கல்
  • சூடான நீரில் தயாரிக்கப்படும் ஷாம்பு 

செய்முறை

  • ஒரு வாளியில் ஷாம்பு போட்டு வெதுவெதுப்பான நீரை ஊற்றி கரைக்கவும். பின், உங்கள் கால்களை 10 நிமிடங்கள் அதில் வைத்திருங்கள்.
  • இதற்குப் பிறகு பியூமிஸ் ஸ்டோன் கொண்டு உங்கள் பாதங்களைத் தேய்க்கவும். இது இறந்த சருமத்தை நீக்கி பின் பாதங்களை சுத்தம் செய்யும்.
  • இப்போது பாதங்களை உலர்த்தி வாழைப்பழத்தோலை கொண்டு கணுக்காலில் நன்கு தேய்க்கவும். பின் 10-15 நிமிடங்களுக்கு பிறகு சுத்தமான டிஷ்யூ-வை கொண்டு பாதங்களை துடைக்கவும்.

பாத வறட்சிக்கு வாழைப்பழத்தோல் மற்றும் தேன் மாஸ்க் 

honey for foot

தேன் ஒரு இயற்கை கிருமி நாசினியாக செயல்படுகிறது. தேன்பாதங்களில் வெடிப்புகளை குணப்படுத்த உதவும். இது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது மற்றும் சருமத்தை உலர்த்துவதைத் தடுக்கிறது. உங்கள் கணுக்கால் வலி இருந்தால் தேன் அதற்கும் நல்ல நிவாரணமாக இருக்கும். அதன் இனிப்பு பண்புகள் எரிச்சலைத் தணிக்கவும் உதவுகின்றன.

தேவையான பொருள்கள்

  • 1 வாழைப்பழத் தோல்
  • 1 டீஸ்பூன் தேன்
  • 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர்

செய்முறை

  • பாதங்களை வெதுவெதுப்பான நீரில் தேய்த்து பின் பாதங்களை உலர வைக்கவும்.
  • வாழைப்பழத் தோலை மிக்ஸியில் போட்டு அரைத்து அதில் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும்.
  • இந்த பேஸ்டை கால்களில் நன்கு தடவி 15 நிமிடங்கள் அப்படியே விடவும்.
  • 15 நிமிடங்களுக்குப் பிறகு ஈரமான துணியால் பாதங்களை சுத்தம் செய்யவும். 

குதிகால் வெடிப்பு குணமாக வாழைப்பழத் தோல் மற்றும் மஞ்சள் 

turmeric for foot

வாழைப்பழத்தோலில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். இதில் காணப்படும் என்சைம்கள் மற்றும் அமிலங்களின் கலவையானது சருமத்தை காக்கும், இறந்த சரும செல்களை அகற்றவும் உதவும். இதேபோல் மஞ்சள் எந்த வகையான காயத்தையும் ஆற்றும்.

தேவையான பொருள்கள்

  • 1 வாழைப்பழத் தோல்
  • 1 டீஸ்பூன் மஞ்சள்
  • 1 தேக்கரண்டி தேன்

செய்யமுறை

  • பாதங்களை சுத்தம் செய்து வாழைப்பழத்தோல்களை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
  • மஞ்சளில் தேன் மற்றும் வாழைப்பழத்தோலை சேர்க்கவும்.
  • இந்த பேஸ்டை கால்களில் தடவி 20 நிமிடங்கள் விடவும். இதற்குப் பிறகு, பாதங்களை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
  • இரவில் தூங்கும் முன் பாதங்களில் மாய்ஸ்சரைசர் கிரீம் தடவ மறக்காதீர்கள்.

வாழைப்பழத் தோலைப் பயன்படுத்துவதால் சிறிய பக்கவிளைவுகள் ஏற்படும். உங்கள் தோல் உணர்திறன் கொண்டதாக இருந்தால், அதைப் பயன்படுத்துவதால் அரிப்பு மற்றும் சிவத்தல் அதிகரிக்கும். வாழைப்பழத்தோல் சில சமயங்களில் சருமத்தை வறண்டதாக மாற்றும். இது உங்களுக்கு பொருந்தவில்லை என்றால் அதை உங்கள் தோலில் பயன்படுத்த வேண்டாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: இரண்டே பொருள்! உங்களை இளமையாக வைத்திருக்க தினமும் குளிக்கும் தண்ணீரில் இதை கலக்கவும்!

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

Image Credit- Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]