இந்த 4 பொருட்களைக் கொண்டு தீபாவளி அன்று உங்கள் முகத்தை பிரகாசிக்க வைக்கலாம்!

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது, இந்த நேரங்களில் பெரும்பாலான பெண்கள் தங்கள் முகம் அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள், இந்த நான்கு பொருட்களைக் கொண்டு தீபாவளி பண்டிகை அன்று உங்கள் முகத்தை பிரகாசிக்க வைக்கலாம் அதற்கான எளிய வழிமுறைகள் இப்பதிவில் உள்ளது.
image

தீபாவளி எல்லா குழப்பங்களுக்கும் மத்தியில், உங்கள் முகத்திற்கு கூடுதல் கவனம் செலுத்த மறந்துவிடுவது நம்மில் பலர் செய்வது தான். இந்த ஹேக்குகளை பின்பற்றுவதால், தீபாவளிக்கு முந்தைய பளபளப்பிற்கு உங்களுக்கு ஆடம்பரமான தயாரிப்புகள் தேவையில்லை.உங்கள் சமையலறையில் உங்களுக்கு தேவையான அனைத்து மேஜிக்களும் உள்ளன. நம் வீட்டில் எப்போதும் இருப்பவைகளில் சில மஞ்சள் , ஆம், மஞ்சளை நம் சமையலில் போடுவோம். அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற நன்மைகள் நிறைந்த, தோல் பராமரிப்புக்கு மஞ்சள் ஒரு சக்தி வாய்ந்தது என்பது இரகசியமல்ல.

தீபாவளிக்கு சரியான ஆடைகளை ஷாப்பிங் செய்வதிலும், வீட்டை சுத்தம் செய்வதிலும், சிறந்த இனிப்புகளை சமைப்பதிலும் தீபாவளி கொண்டாட்டத்தை திட்டமிடுவதிலும் நீங்கள் மும்முரமாக இருக்கலாம் . ஆனால் உங்கள் முகம் தீபாவளி அன்று இயற்கையாக மேக்கப் இல்லாமல் ஜொலிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

தீபாவளி அன்று உங்கள் முகம் ஜொலிக்க இப்படி பண்ணுங்க

vivid-colors-navratri-celebration-festival_23-2151262804 (1)

மஞ்சள்

உங்கள் முகத்தை பிரகாசமாக்க பீசன் (கடலை மாவு) மற்றும் தயிருடன் மஞ்சளை கலந்து வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக். அதைப் பயன்படுத்துங்கள், 10 நிமிடங்கள் முகத்தில் தடவி உலற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள் உங்கள் சருமம் முன்பை விட புத்துணர்ச்சியுடன் இருப்பதைப் பாருங்கள்.

தேன்

மற்றொரு ரகசிய ஆயுதம் தேன், தேன் சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவும். உங்கள் சமையலறையில் இருந்து சிறிது தேனை எடுத்து உங்கள் முகத்தில் ஃபேஸ் மாஸ்க் போன்று தடவவும். இது 15 நிமிடங்களுக்கு காயட்டும், பின் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள் அந்த மென்மையான தோலை உடனடியாக உணருவீர்கள். கொஞ்சம் கூடுதல் பளபளப்பு வேண்டுமா? எலுமிச்சை சாற்றில் சில துளிகள் கலந்து, பின்னர் ஃபேஸ் மாஸ்க் போன்று தடவவும்.

அலோ வேரா ஜெல்

கற்றாழை வீட்டில் ஒரு செடி இருந்தால் இன்னும் நல்லது. அலோ வேரா ஜெல் உங்கள் சருமத்தை அழகுப்படுத்த சரியானது, குறிப்பாக தீபாவளிக்கு தயாராகும் போது அது இன்ஸ்டன் குளோவை தரும். இது உங்கள் சருமத்தை குளிர்ச்சியடையச் செய்து, மென்மையாக்குகிறது, மேலும் உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் வைத்திருக்கும். கற்றாழையிலிருந்து ஜெல்லை வெளியே எடுக்கவும், அதை முகத்தில் தடவி, சுமார் 15 நிமிடங்கள் உலரவிடவும். தினசரி உபயோகித்து பாருங்கள்.உங்கள் சருமம் எந்த நேரத்திலும் மென்மையாக இருக்கும், ஆரோக்கியமான தோற்றத்தை கொடுக்கும்.

ரோஸ் வாட்டர்

உங்கள் சருமம் சோர்வாக உணரும் போதெல்லாம் அதை தெளிக்கவும், நீங்கள் உடனடியாக புத்துணர்ச்சி அடையவும். நாள் முழுவதும் பளபளப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும், ரோஸ் வாட்டர் சரியான வழியாகும், பரபரப்பான தீபாவளிக் காலத்தில் இது உங்களை பொலிவுற செய்யும். எனவே, பண்டிகைக் கால கொண்டாடத்தின் முன், இந்த எளிய, இயற்கையான விஷயங்களைக் கொண்டு உங்கள் சருமத்தைப் பிரகாசிக்க வைக்க மறக்காதீர்கள்.

உங்கள் சமையலறை பொருட்கள் மூலமே உங்கள் முகம் ஜொலிக்க செய்யும்போது விலையுயர்ந்த பொருட்கள் தேவை இல்லை. ஒளிரும் முகமே இந்த தீபாவளிக்கு உங்களுக்கான பரிசு.

மேலும் படிக்க:உலர்ந்து, உடைந்த தலைமுடியை மீண்டும் வேகமாக வளர வைக்க 9 வீட்டு வைத்தியம்!

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil

image source: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP