Hair care tips: நீங்கள் அழகு குறிப்புகளை தேடுபவராக இருந்தால், முடி வளர்ச்சிக்கு வெங்காய சாறு பயன்படுத்துவது குறித்து கேள்விப்பட்டிருக்கலாம். அந்த அளவிற்கு முடியின் வளர்ச்சிக்கு வெங்காய சாறு பயன்படுகிறது என்று கூறப்படுகிறது. அந்த வகையில், வெங்காய சாறை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: இளமையான தோற்றத்தை அளிக்கும் கொலஜன் நிறைந்த உணவுகள்; சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த இவற்றை சாப்பிடவும்
சினிமா நட்சத்திரங்கள் தொடங்கி அழகுக் கலை வல்லுநர்கள் வரை வெங்காய சாறு பயன்படுத்துவதன் மூலம் தலைமுடி வளர்ச்சியை ஆரோக்கியமாக மேம்படுத்த முடியும் என்று கூறுகின்றனர். இது எவ்வாறு சாத்தியமாகும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.
தலைமுடி வளர்ச்சிக்கு வெங்காய சாறு ஒரு ஆற்றல் மையம் போன்று விளங்குகிறது. இதில் சல்ஃபர் நிறைந்துள்ளது. இது கொலாஜனை அதிகரிக்கவும், முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தவும் உதவுகிறது. மேலும், இதில் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் அதிகம் உள்ளன. இது இயற்கையாகவே பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.
வெங்காய சாறை உங்கள் வீட்டிலேயே எளிதாக தயாரித்து பயன்படுத்த முடியும். நன்கு சிவப்பு நிறத்தில் இருக்கும் வெங்காயத்தில் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் அதிகமாக இருக்கும். மஞ்சள் நிறத்தில் இருக்கும் வெங்காயத்தில் சல்ஃபர் அதிகமாக இருக்கும். இவை இரண்டுமே சிறப்பாக வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் வெங்கயத்தின் தோலை நீக்கிவிட்டு, அதனை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். இதனை நன்றாக அரைத்து பசை பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இனி, சுத்தமான காட்டன் துணியை பயன்படுத்தி அரைத்து வைத்த வெங்காயத்தில் இருந்து சாறு பிழிய வேண்டும்.
மேலும் படிக்க: முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி; இனி முருங்கை பொடியை இப்படி யூஸ் பண்ணுங்க மக்களே
இந்த வெங்காய சாறுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் அல்லது சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெய் சேர்க்கலாம். இது தவிர சிறிது லாவெண்டர் எண்ணெய்யும் இதில் சேர்க்கலாம். இது வெங்காயத்தின் இயற்கையான வாசனையை குறைக்க உதவுகிறது.
வெங்காய சாறில் சிறிது காட்டனை நனைத்து அதனை உங்கள் உச்சந்தலை பகுதியில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். இதனை செய்வதற்கு முன்பாக ஒவ்வாமை ஏற்படுகிறதா என்று சோதித்து பார்க்க பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியம் ஆகும்.
இவ்வாறு செய்த பின்னர் சுமார் மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்கு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சாறு உறிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும். இதையடுத்து, சுமார் 30 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடவும்.
இதன் பின்னர், மிதமான ஷாம்பூவை பயன்படுத்தி தலை முடியை நன்றாக அலச வேண்டும். குறிப்பாக, வெங்காய சாறின் வாசனை நீங்கும் வரை அலசுவது முக்கியம். இந்த செயல்முறையை வாரத்திற்கு இரண்டு முறை பின்பற்றலாம். இப்படி சுமார் ஆறு முதல் எட்டு வாரங்கள் பயன்படுத்திய பின்னர், தலை முடி வளர்ச்சி அதிகரிப்பதை நீங்கள் உணர முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]