Remove Blackness of the Back in Tamil: முதுகு பக்கம் கருப்பா இருக்கா? அதை எப்படி சரிசெய்ய வேண்டும் தெரியுமா?

கருப்பாக தெரியும் முதுகை பளபளப்பாக மாற்ற உதவும் வீட்டு வைத்தியம். 

blackness tamil tips

அழகான மற்றும் மென்மையான சருமத்தைப் பெற சருமப் பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவது மிக மிக அவசியம். இதை நினைவில் கொள்ள நாம் ஏனோ மறந்து விடுகிறோம். அன்றாட வாழ்க்கையில் சரும பராமரிப்பு என்பது மிக மிக அவசியமான ஒன்று. சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்து கொள்ள கட்டாயம் சரும பராமரிப்பு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த குளிர்காலத்தில் வெதுவெதுப்பாக உணர, வெயிலில் சிறிது நேரம் இருக்க ஆசைப்படுகிறோம். ஆனால் அதிக நேரம் சூரிய ஒளியில் இருப்பதால், உங்கள் முகத்திலும் உடலிலும் பலவிதமான சரும பாதிப்பு பிரச்சனை ஏற்படும் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? இதைப் பற்றி தெரிந்துக் கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள். மேலும் வீட்டில் இருக்கும் 3 பொருட்களைப் பயன்படுத்தி முதுகில் உள்ள கருமையை நீக்கி அழகான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெறவது எப்படி? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு – 4-5 டேபிள் ஸ்பூன்
  • தயிர் – 1-2 டேபிள் ஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் – 3 டீஸ்பூன்

கடலை மாவின் நன்மைகள்

  • கடலை மாவில் இருக்கும் மூலக்கூறுகள் சருமத்தில் படியும் கருமையைக் குறைக்க உதவுகிறது.
  • சருமத்தில் எந்தவித சரும தொற்று பாதிப்பும் ஏற்படாமல் கடலை மாவு பாதுகாக்கிறது.

tamil beauty tips

ரோஸ் வாட்டரின் நன்மைகள்

  • ரோஸ் வாட்டர் சருமத்தில் ஏற்படும் துளைகளின் அளவு பெரிதாகாமல் தடுக்கிறது.
  • இது சருமத்தில் இயற்கையான டோனராக செயல்படுகிறது.
  • சருமத்திற்கு நெகிழ்வு தன்மையைத் தர ரோஸ் வாட்டர் உதவுகிறது.

தயிரின் நன்மைகள்

  • சருமத்தில் காணப்படும் வயதான தோற்றத்தின் அறிகுறிகளைக் குறைக்க தயிர் உதவுகிறது.
  • இதைப் பயன்படுத்துவதன் மூலம், சருமம் நீண்ட காலத்திற்கு இளமையாகவும் அழகாகவும் இருக்கும்.
  • சருமத்தை மேம்படுத்த தயிர் மிகவும் பயன்படுகிறது.

பயன்படுத்தும் முறை

  • முதுகின் கருமையைக் குறைக்க, முதலில் ஒரு கிண்ணத்தில் 4-5 ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1-2 ஸ்பூன் தயிர் சேர்க்கவும்.
  • இப்போது அதில் 3 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
  • பின்பு ஒரு பிரஷில் இந்த கலவையை தோய்த்து எடுத்து, அதை கழுத்தில் இருந்து முதுகு வரை தடவவும்.
  • முதுகு பக்கம் கை எட்டவில்லை என்றால் யாரையாவது உதவிக்கு வைத்துக் கொள்ளுங்கள். பின்பு 20 நிமிடங்கள் இதை அப்படியே ஊற விடவும்.
  • இப்போது காட்டன் துணி மற்றும் தண்ணீரை கொண்டு சுத்தம் செய்யவும்.
  • வாரத்திற்கு 2 முதல் 4 முறை இப்படி செய்யலாம்.
  • இதை தொடர்ந்து பின்பற்றி வந்தால் சருமம் சுத்தமாகவும், பளபளப்பாகவும் தெரியும்.
  • குறிப்பு: வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. அல்லது பேட்ச் டெஸ்ட் செய்துவிட்டு பயன்படுத்தவும்.

உங்களுக்கும் முதுகு பக்கம் கருப்பாக இருந்தால் இந்த வழிமுறையைப் பின்பற்றி அதைச் சரிசெய்யுங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP