ஹார்மோன் முகப்பருவின் அர்த்தம் என்ன தெரியுமா? உங்கள் ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக அதன் விளைவு சருமத்தில் வெளிப்படுவது. அதனால் தான் இவை ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் முகப்பருக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஹார்மோன் முகப்பரு டீனேஜில் மட்டுமே ஏற்படும் என்று ஒரு கட்டுக்கதை பரவலாகச் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அதில் உண்மையில்லை. இந்த டிப்ஸை முயன்று பாருங்களேன், நிச்சயம் பளபளக்கும்.
இந்த வகையான முகப்பருக்கள் எந்த வயதிலும் ஏற்படலாம் மற்றும் எந்த நேரத்திலும் உங்களைத் தொந்தரவு செய்யலாம். 20-29 வயதுடைய பெண்களில் 50 சதவீதம், 40-49 வயதுடைய பெண்களில் 25 சதவீதம் பேர் ஹார்மோன் முகப்பருவை பெற்றிப்பதாக அறிக்கை ஒன்றில் புள்ளி விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் ஹார்மோன் முகப்பரு குறித்து வெவ்வேறு கருத்துக்களைப் பதிவு செய்கின்றனர். அந்த வகையில் அழகியல் மருத்துவரும், தோல் மருத்துவருமான டாக்டர் சாரு சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹார்மோன் முகப்பரு குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
ஹார்மோன் முகப்பருவில் இருந்து சருமத்தை பாதுகாத்து, அதை கட்டுப்படுத்தி முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள 4 படிகளை டாக்டர் சாரு சிங் பகிர்ந்துள்ளார். அவற்றை இந்த பதிவில் குறிப்பிடுகிறோம்.
முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்யாத மென்மையான சரும பராமரிப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். உங்கள் சருமத்தில் ரசாயனங்களின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும், அத்தகைய சூழ்நிலையில் மிகவும் லேசான சரும பராமரிப்பு முறைகளை பின்பற்றுவது நல்லது. உங்களுக்கு ஹார்மோன் முகப்பரு பிரச்சனை இருந்தால், முடிந்தவரை சாதாரண சரும பராமரிப்பு வழக்கத்தைப் பின்பற்றுங்கள். இந்த வகையான முகப்பரு மிகவும் தொந்தரவை ஏற்படுத்தலாம். அதே நேரம் இதன் காரணமாக நீங்கள் நீண்ட சிகிச்சைக்கு உட்பட வேண்டியிருக்கும். எனவே, இயற்கையானப் பொருட்களை வைத்து சரும பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுங்கள்.
நீங்கள் பின்பற்றும் சரும பராமரிப்பு முறைகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். ஆனால் உணவில் கவனம் செலுத்துவது உங்களுடைய கடமை. உணவில் அதிக கவனம் செலுத்தவில்லை என்றால் முகப்பரு பிரச்சனை அதிகரிக்கும். முகப்பருவை கட்டுக்குள் வைத்திருக்க, உங்கள் உடலில் போதுமான ஊட்டச்சத்து இருப்பது அவசியம். ஊட்டச்சத்து சரியாக இல்லாவிட்டால், ஹார்மோன்களில் பல மாற்றங்கள் நிகழும்.
இந்த பதிவும் உதவலாம்:சூரிய கதிர்களால் சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்க என்ன செய்வது?
அதனால் முழுமையான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உணவில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் சேர்த்து கொள்ளுங்கள். உணவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பது அவசியம். உங்கள் உடலில் ஏதேனும் வைட்டமின் குறைபாடு இருந்தால், நீங்கள் உணவியல் நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகலாம்.
இப்போதெல்லாம் பலரும் தங்கள் விருப்பப்படி பலவகையான சப்ளிமெண்ட்ஸ்களைத் தேர்ந்தெடுத்து சாப்பிடத் தொடங்குகிறார்கள். இது சரியான முறையல்ல. மருத்துவர் அல்லது நிபுணரிடம் அறிவுரைகள் கேட்ட பின்பே உங்களுக்கான சரியான சப்ளிமென்ட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உங்கள் உடலில் எந்த வகையான குறைபாடு உள்ளது என்பதை முழுமையாக தெரிந்து கொண்டு, அதற்கேற்ப சப்ளிமென்ட்களைத் தேர்ந்தெடுங்கள். இவை உங்களுக்கு சிறந்த பலனைத் தரும். அதே போல் அதிகப்படியான சப்ளிமெண்ட்ஸ்கள் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும்.
ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி செய்வதும் அவசியம். உடற்பயிற்சி செய்யாவிட்டால், உடலின் ஹார்மோன் அளவு சீராக இருக்காது. உடல் உழைப்பு இல்லாத போது கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இதனால் ஹார்மோன்கள் மோசமடைகின்றன. உடலின் ஹார்மோன்கள் சீராக இருக்க, முறையாக உடற்பயிற்சி செய்வது அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்:இரவில் பயன்படுத்த வேண்டிய சிறந்த பேஸ் பேக் பற்றி தெரியுமா உங்களுக்கு?
மிகவும் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யாவிட்டாலும் கூட நடப்பது, அல்லது ஜாகிங் செல்வது போன்ற உயற்பயிற்சிகளை செய்யலாம். ஆனால் அதை கண்டிப்பாக முறையாக செய்ய வேண்டும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி மிக மிக அவசியம்.
எனவே நீங்களும் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் முகப் பரு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால் அதை சரி செய்ய, இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]