herzindagi
glowing skin  big

சூரிய கதிர்களால் சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்க என்ன செய்வது?

வெயிலினால் சருமம் கருமையடைவதை தடுக்க, சருமப் பராமரிப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
Editorial
Updated:- 2022-12-20, 10:24 IST

எந்தப் பருவ காலமாக இருந்தாலும், சருமத்தை பராமரிக்க வேண்டியது அவசியம். இதற்காக பல்வேறு வகையான சரும பராமரிப்பு பொருட்களை வாங்குகிறோம். இருப்பினும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, சூரியனிலிருந்து வெளிவரும் UV கதிர்கள் நம் சருமத்தை சேதப்படுத்துகின்றன. மேலும், சூரிய கதிர்களால், சருமம் கருமையாகி, முகத்தின் பொலிவு குறைந்துவிடும்.

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, அவ்வப்போது சருமத்தை கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம். சூரிய ஒளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட கருமையை குறைக்க உதவும் 2 விஷயங்கள் பற்றி இன்று பார்க்கவிருக்கிறோம். இந்த ஃபேஸ் பேக்கின் நன்மைகள் மற்றும் அதை எப்படி செய்வது போன்ற தகவல்களைப் பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்

  • ஆரஞ்சு பழ தோல்
  • பச்சை பால்

ஆரஞ்சு பழ தோலின் நன்மைகள்

benefits of orange peel

  • ஆரஞ்சு பழத்தில் வைட்டமின்-C அதிகம் உள்ளது, இது சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவுகிறது.
  • இதில் உள்ள தனிமம் சருமத்தில் இயற்கையான பொலிவை கொண்டுவர உதவுகிறது.
  • சருமத்தை மென்மையாக வைத்திருக்க ஆரஞ்சு பயன்படுத்தப்படுகிறது.

பச்சை பால் நன்மைகள்

benefits of raw milk

  • பச்சை பால் சருமத்தை மென்மையாக்கும்.
  • பச்சை பால் சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவுகிறது.
  • பச்சை பால் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த பதிவும் உதவலாம்: முகத்தை பளபளக்க வைக்கும் கருஞ்சீரகம்!!!

எப்படி பயன்படுத்துவது

how to use to avoid color problem

  • இந்த ஃபேஸ் பேக் செய்ய, 2 ஆரஞ்சு பழங்களின் தோலை அரைத்துக் கொள்ளவும்.
  • இதை அரைக்க மிக்ஸி பயன்படுத்தலாம்.
  • அதன் பிறகு, அதில் 2 முதல் 4 ஸ்பூன் வரை பச்சை பால் சேர்க்கவும்.
  • இரண்டையும் நன்றாகக் கலக்கவும்.
  • இப்போது இந்த ஃபேஸ் பேக்கை உங்கள் முகத்தில் தடவவும்.
  • இந்த ஃபேஸ் பேக் கண்களில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: சரும வறட்சியை போக்கும் எண்ணெய்கள் இவை தான் தெரியுமா!

  • குறைந்தபட்சம் 15 முதல் 20 நிமிடங்கள்வரை அதை அப்படியே உலர விடுங்கள்.
  • அதன் பிறகு, சுத்தமான தண்ணீரில் முகத்தை நன்கு கழுவவும்.
  • வாரத்திற்கு 2 முறை இதை பயன்படுத்தலாம்.
  • இதனை தொடர்ந்து பயன்படுத்தினால், உங்கள் முகம் பிரகாசமாகவும், தெளிவாகவும் இருக்கும்.

குறிப்பு - உங்கள் சருமம் உணர்திறன் வாய்ந்ததாக இருந்தால், முதலில் சரும நிபுணரை அணுகி, ஆலோசித்த பின்னரே இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்க வேண்டும். மேலும், பேட்ச் டெஸ்ட் செய்ய மறக்காதீர்கள். சருமத்தில் சிறிதளவு எரிச்சல் ஏற்பட்டாலும், இந்த செய்முறையை முயற்சிக்காதீர்கள்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]