herzindagi
hacks to make this deodorant at home

அக்குளில் துர்நாற்றமா?? போக்குவதற்கு அருமையான வீட்டு வைத்தியம்!

உங்கள் அக்குள்களில் வியர்வை துர்நாற்றம் வருகிறதா? வீட்டிலேயே இந்த டியோடரன்ட்டை செய்து பயன்படுத்தலாம்.
Editorial
Updated:- 2022-12-15, 10:00 IST

கோடைக்காலம் மற்றும் குளிர்காலம் என காலநிலையை பொருட்படுத்தாமல் சிலருக்கு எல்லா நேரமும் வியர்வை வழியும். இதில் இருக்கும் அமிலம் உடல் துர்நாற்றத்திற்கு காரணமாகிறது. இதை சரிசெய்ய கடைகளில் பல டியோடரன்டுகள் விற்கப்பட்டாலும் இந்த பிரச்சனையை வேரிலிருந்தே முற்றிலுமாக நீக்க இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

அக்குள் துர்நாற்றத்தை சரிசெய்யும் டியோடரன்டை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? என்பதை உங்களுக்கு சொல்ல போகிறோம்.

லாவெண்டர் டியோடரன்ட்

lavender deodarant

தேவையான பொருட்கள்

  • கிரீன் டீ வாட்டர் – 1 கப்
  • லாவெண்டர் எசன்ஷியல் ஆயில் – 5 சொட்டு
  • ரோஸ் வாட்டர் – 1 கப்

தயாரிக்கும் முறை

  • முதல் நாள் இரவே ரோஜா இதழ்களை தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • அடுத்த நாள் காலையில் இந்த நீரில், கிரீன் டீ வாட்டரை சேர்க்கவும்.
  • பின்னர் அதில் 5 சொட்டு லாவெண்டர் எசன்ஷியல் ஆயிலை சேர்க்கவும்.
  • இந்த கலவையை நன்கு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைக்கவும். பின்பு இதை அக்குள் பகுதியில் தெளித்து கொள்ளவும்.
  • வீட்டில் தயாரிக்கப்படும் இந்த டியோடரன்டை நாள் ஒன்றுக்கு 1 முதல் 2 முறை பயன்படுத்தினால் உங்கள் அக்குள் துர்நாற்றம் பிரச்சனை சரியாகி விடும்.

பேக்கிங் சோடா டியோடரன்ட்

girl with deodorant

தேவையான பொருட்கள்

  • பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
  • கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்
  • தண்ணீர் - 1/2 கப்

தயாரிக்கும் முறை

  • 1/2 கப் தண்ணீரில் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின்பு அதில் எலுமிச்சை சாறை சேர்க்கவும். உங்களுக்கு விருப்பமிருந்தால் எலுமிச்சை தோலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரையும் வடிக்கட்டி இதில் சேர்க்கலாம்.
  • அடுத்து இந்த கலவையில் கற்றாழை ஜெல் சேர்த்து எல்லா பொருட்களும் ஒன்றோடு ஒன்று சேரும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.
  • இப்போது இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து அக்குளில் தடவி வரவும். அக்குள் துர்நாற்ற பிரச்சனைக்கு இது சிறந்த தீர்வை தரும்.

சோள மாவு டியோடரன்ட்

girl with body spray

தேவையான பொருட்கள்

  • சோள மாவு – 1 கப்
  • சந்தன எண்ணெய் – 5 சொட்டு

தயாரிக்கும் முறை

  • கடைகளில் விற்கப்படும் சோள மாவை வாங்கி அதை தண்ணீரில் கரைத்து மெல்லிய கலவையாக தயார் செய்யவும்.
  • பின்பு இதில் சந்தன எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி வைக்கவும்.
  • இதை உங்கள் அக்குள்களில் பயன்படுத்தவும். இந்த டியோடரன்ட் 2 வகையான நன்மைகளை தருகிறது. முதலாவதாக இது அக்குளில் வரும் துர்நாற்றத்தை குறைக்க உதவுகிறது. கூடவே அக்குள் கருமையையும் நீக்குகிறது.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]