herzindagi
image

Homemade Keratin Treatment: எந்த வகை முடியாக இருந்தாலும் இந்த கெரட்டின் சிகிச்சை கூந்தலுக்கு பளபளப்பை கொடுக்கும்

தலைமுடியை சரியாக பராமரிக்க வீட்டு இருக்கும் பொருட்களை கொண்டு வைத்திய உதவிகளை எடுக்க வேண்டும். இப்படி செய்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்
Editorial
Updated:- 2024-10-03, 14:40 IST

முடி என்பது நம் அழகின் முக்கிய அங்கமாகும். அவற்றை சரியான முறையில் கவனித்துக்கொள்வது அவசியம். முடி வகைக்கு ஏற்ப தயாரிப்பு தேர்வு செய்ய வேண்டியதும் முக்கியம். அழகான கூந்தலுக்கு வீட்டு வைத்தியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் அவை முற்றிலும் இயற்கையானவை.

அழகான கூந்தலைப் பெற அடிக்கடி கெரட்டின் சிகிச்சையை வெளியில் செய்து கொள்கிறோம். ஆனால் வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கெராடின் சிகிச்சையை ரசாயனம் இல்லாத முறையிலும் செய்யலாம். வீட்டிலேயே கெரட்டின் சிகிச்சையை செய்வது எப்படி என்பதை பார்ப்போம் மற்றும் முடிக்கு இந்த விஷயங்களின் நன்மைகளைப் பற்றியும் முழுமையாக பார்க்கலாம்.

 

மேலும் படிக்க: பெண்கள் அதிகம் அணிய ஆசைப்படும் டெம்பிள் ஜூவல்லரிகளின் புதிய கலெக்சன்கள்

 

கெரட்டின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட வேண்டிய பொருள்கள்

 

  • 2 முதல் 3 வாழைப்பழங்கள்
  • தயிர்

கூந்தலுக்கு தயிர் தடவினால் கிடைக்கும் நன்மைகள்

 

  • பொடுகு பிரச்சனையை குறைக்க உதவுகிறது.
  • வறட்சியை குறைத்து முடிக்கு ஊட்டமளிக்க உதவுகிறது.
  • கூந்தலுக்கு இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது.

வாழைப்பழத்தை முடிக்கு தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்

banana

 

  • பிளவு முனைகளை குறைக்க வாழைப்பழம் மிகவும் உதவியாக இருக்கும்.
  • வாழைப்பழத்தை தலைமுடியில் தடவினால் கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
  • முடி உதிர்வதும் குறைய தொடங்குகிறது.
  • வாழைப்பழம் முடியின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது.

கெரட்டின் சிகிச்சை செய்யும் முறைகள்

curd

 

  • முதலில் முடியின் நீளத்திற்கு ஏற்ப ஒரு பாத்திரத்தில் 2 முதல் 3 வாழைப்பழங்களை மசித்துக் கொள்ளவும்.
  • அதன் பிறகு அதில் 2 முதல் 4 ஸ்பூன் தயிர் கலக்கவும்.
  • இவை இரண்டையும் நன்றாகக் கலந்து ஹேர் மாஸ்க் தயார் செய்துக்கொள்ளவும்.
  • இந்த பேஸ்டை தலைமுடியில் தடவவும்.
  • முடியின் நீளத்தில் சுமார் 1 மணி நேரம் விடவும்.
  • அதன் பிறகு தண்ணீர் மற்றும் ஷாம்பு உதவியுடன் முடியை நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.
  • இந்த தீர்வை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை முயற்சி செய்யலாம்.
  • தலைமுடியின் இழந்த பிரகாசத்தை மீண்டும் கொண்டு வர உதவுவது மட்டுமல்ல.
  • சேதமடைந்த முடியை இயற்கையான முறையில் சரிசெய்யவும், ஊட்டமளிக்கவும் வாழைப்பழ கெரட்டின் மாஸ்க் உதவுகிறது.


மேலும் படிக்க: எண்ணெய் பொடுகு, உலர்ந்த பொடுகு இரண்டையும் நிரந்தரமாகப் போக்க வழிகள்


குறிப்பு - எந்தவொரு தீர்வையும் முயற்சிக்கும் முன் நிபுணர் ஆலோசனையைப் பெற வேண்டும். மேலும் ஒரு முறை பேட்ச் டெஸ்ட் செய்யவும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]