herzindagi
image

Dandruff Removal Remedies: எண்ணெய் பொடுகு, உலர்ந்த பொடுகு இரண்டையும் நிரந்தரமாகப் போக்க வழிகள்

பொடுகு முடியை சேதப்படுத்தி முடி உடைதல் மற்றும் முடி உதிர்தல் பிரச்சனைய ஏற்படுத்துகிறது. இந்த வீட்டு வைத்தியம் மூலம் முடியில் பொடுகு பிரச்சனையை குறைக்கலாம். 
Editorial
Updated:- 2024-10-02, 14:07 IST

பொடுகு பிரச்சனை எந்த பருவத்திலும் வரலாம், இதன் காரணமாக முடி வலுவிழந்துவிடும். மேலும் முடி உதிர்தல் மற்றும் உடைதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட, பெண்கள் பல வகையான பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பல சமயங்களில் பலன் விருப்பப்படி இல்லை, இந்தப் பிரச்சனை அப்படியே இருக்கிறது. பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபடுவதை பார்க்கலாம். இந்த பிரச்சனையை குறைக்கக்கூடிய சில வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.

 

மேலும் படிக்க: முடி வளர்ச்சிக்குத் தக்காளி கொடுக்கும் கேரண்டி... மறக்காமல் இந்த 4 வழிகளில் ட்ரை பண்ணுங்கள்

பொடுகு பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம்

பொடுகை நீக்க உச்சந்தலையை சுத்தம் செய்வது அவசியம். இதனை அறிய பொடு வகைகளை தெரிந்துக்கொள்வது அவசியம். பொடுகு இரண்டு வகையானது என்றும், அதற்கேற்ப சிகிச்சையளிப்பது அவசியம் என்றும் நிபுணர் கூறினார். ஒன்று எண்ணெய் பொடுகு மற்றொன்று உலர் பொடுகு. இரண்டு வகையான பொடுகுகளிலிருந்தும் விடுபட சில வீட்டு வைத்தியங்கள்

எண்ணெய் பொடுகை போக்க ஹேர் மாஸ்க் செய்ய தேவையான பொருள்கள்

soaked coriander (16)

 

  • உளுந்து பருப்பு 1 கிண்ணம்
  • 1 வெள்ளரி

 

உளுந்து பருப்பு ஹேர் மாஸ்க்


மேலும் படிக்க: 10 வயது குறைந்து இளமையாகத் தெரிய இந்த கொரியன் அரிசி கிரீம் ட்ரை பண்ணுங்கள்

 

  • உளுத்தம் பருப்பை இரவு முழுவதும் ஊற வைக்கவும்
  • இதற்குப் பிறகு காலையில் அதை அரைக்கவும்.
  • வெள்ளரிக்காயை மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • வெள்ளரிக்காய் தண்ணீரை சல்லடை உதவியுடன் வடிக்கட்டி எடுத்துக்கொள்ளவும்.
  • வெள்ளரி சாறு மற்றும் அரைத்த உளுத்தம் பருப்பு இரண்டையும் கலக்கவும்.
  • இந்த பேஸ்ட்டை முடியில் தடவவும்.
  • 30 நிமிடங்களுக்குப் பிறகு தலைமுடியை தண்ணீரில் கழுவவும்.
  • இந்த மாஸ்கை வாரத்தில் இரண்டு நாட்கள் பயன்படுத்தலாம்.

உலர்ந்த பொடுகை சுத்தம் செய்ய தேவையான பொருள்கள்

flour

  • 1 கிண்ணம் அரிசி மாவு
  • 1 தேக்கரண்டி தேன்
  • 2 உருளைக்கிழங்கு

உலர்ந்த பொடுகை ஹேர் மாஸ்க் செய்யும் முறைகள்

 

  • அரிசி மாவை இரவு முழுவதும் ஊற வைக்கவும்
  • இதற்குப் பிறகு காலையில் அதை அரைக்கவும்.
  • உருளைக்கிழங்கை மிக்ஸியில் அரைக்கவும்.
  • இதற்குப் பிறகு அரைத்த உருளைக்கிழங்கு தண்ணீரை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கு சாறு, அரைத்த அரிசி மாவு மற்றும் தேன் கலக்கவும்.
  • இந்த பேஸ்ட்டை முடியில் தடவவும்.
  • 30 நிமிடங்களுக்குப் பிறகு தலைமுடியை தண்ணீரில் கழுவவும்.
  • இந்த மாஸ்கை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்யவும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]