herzindagi
home made face wash

Home remedies for skin glowing: ஒளிரும் முக பளபளப்பிற்கு உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்!

அழகுச் சாதன பொருள்கள் எதுவும் இல்லாமல் வீட்டிலேயே ஒருவர் பளபளப்பான மற்றும் ஒளிரும் சருமத்தைப் பெற முடியும்.
Editorial
Updated:- 2023-12-25, 09:30 IST

ஒவ்வொரு பெண்களும் தங்களை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்று அதிகம் மெனக்கெடுவார்கள். இதற்காக அழகு நிலையங்களுக்குச் செல்வதைப் பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் அனைவராலும் அங்கு செல்வது என்பது முடியாத காரியம். இதுப்போன்ற நிலையில் உள்ள பெண்களாக நீங்கள்? கவலை வேண்டாம். அழகுச் சாதன பொருள்கள் எதுவும் இல்லாமல் வீட்டிலேயே ஒருவர் பளபளப்பான மற்றும் ஒளிரும் சருமத்தைப் பெற முடியும். உங்களது வீடுகளில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருள்கள் போதும்.. அப்ப என்ன? முதல்ல இத தெரிஞ்சுக்குவோம் வாருங்கள்..

milk cream face wash

பளபளப்பான முக பொலிவிற்கான டிப்ஸ்கள்:

  • பாலாடை: பல தலைமுறைகளாக பெண்கள் பயன்படுத்தப்படும் அழகுச்சாதன பொருள்களில் முக்கியமானது பாலாடை. தினமும் காலை அல்லது மாலை நேரங்களில் நீங்கள் பாலாடை எடுத்து முகத்தில் தடவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். 
  • இதில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.  
  • குளிர்காலத்தில் கூட சருமம் வறண்டுவிடுவதில்லை. எப்போதும் உங்களது சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்கிறது.
  • நீங்கள் பாலாடையை அப்படியே முகத்தில் தடவலாம். இல்லையென்றால் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ் பேக்காகவும் உபயோகிக்கலாம்.
  • கடலை மாவு: பெண்கள் தங்களது முகத்தை எப்போதும் பளபளப்புடன் வைத்திருப்பதற்கு உதவும் எளிய அழகுச்சாதனப் பொருள்களில் ஒன்று தான் கடலை மாவு. இதனுடன் மஞ்சள் மற்றும் பால் அல்லது தண்ணீர் கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். 
  • இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருக்களைத் தடுக்கிறது. சருமத்தை எப்போதும் பளபளப்புடன் வைத்திருக்கிறது.

மேலும் படிங்க: இந்த ஜூஸ் குடிங்க.. குளிர்காலத்தில் சருமம் பிரகாசமாகுமாம்!

  • பப்பாளி: சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பேஸ் வாஸ் மற்றும் பேஸ் கிரிம்களில் பப்பாளி அதிகளவில் சேர்க்கப்படுகிறது. இதில் உள்ள பப்பேன் எனப்படும் புரோட்டியோலிக் என்சைம், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. முகத்தை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
  • நீங்கள் பப்பாளி பழத்தை முகத்தில் நன்றாக அப்ளை செய்யும் போது சருமம் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். மேலும் பப்பாளியுடன் எலுமிச்சை சாறு கலந்து பேஸ் பேக் போன்றும் நீங்கள் பயன்படுத்தலாம்.. இந்த பேக் உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்து, கறைகளை மறைத்து, பளபளக்கும்.
  • தேன்: தேனில் இயற்கையாகவே மாய்ஸ்சரைசர், ஆன்டிமைக்ரோபியல், ஹைக்ரோஸ்கோபிக், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இது உங்களது சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருப்பது மட்டுமில்லாமல், சருமத்திற்கு நுட்பமான பிரகாசத்தையும் வழங்குகிறது. 

  skin glowing for women

  • நீங்கள் தக்காளி சாறுடன்  தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். தக்காளியிலும் பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் போன்ற ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் , வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் சருமத்தைப் பராமரிப்பதில் சிறந்து விளங்குகிறது.
  • அலோ வேரா ஜெல்( கற்றாழை): சரும பராமரிப்பில் கற்றாழைக்கு முதன்மை இடம் என்று தான் கூற வேண்டும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. குளிர்காலத்தில் கூட சருமத்தை வறண்டு விட செய்வதில்லை.  
  • மேலும் இதில் உள்ள குளிர்ச்சியான பண்புகள் சரும எரிச்சலைத் தவிர்க்கிறது. பளபளப்பான சருமத்தைப் பெறுவதற்கும் உதவியாக உள்ளது.
  • கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து உங்களது முகத்தில் அப்ளை செய்யலாம்.
  • தேங்காய் எண்ணெய்: இதில் உள்ள வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ மற்றும் கொழுப்பு அமிலங்கள் சருமத்தை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. தினமும் தூங்கும் போது அல்லது உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது முகத்தில் தேங்காய் எண்ணெய்யை அப்ளை செய்யவும்.  ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளால் முதுமையைத் தடுக்கிறது.

மேலும் படிங்க:  குளிர்கால உடல் எடை குறைப்பிற்கு உதவும் கீரை!

  • குறைவான தீயில் தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி முகத்தில் அப்ளை செய்யவும். பின்னர் உங்களது விரல்களைக் கொண்டு மசாஜ் செய்யவும். இவ்வாறு தொடர்ந்து நீங்கள் செய்து வரும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதோடு சருமம் எப்போதும் பிரகாசமாக இருக்க உதவியாக இருக்கும்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]