
இப்போதெல்லாம், ஒவ்வொருவரும் தங்கள் வீட்டை அலங்கரிக்கும் போது தாவரங்களைப் பயன்படுத்துகிறார்கள். தாவரங்கள் உங்கள் வீட்டில் காற்றை மேம்படுத்துவதோடு உங்கள் மனநிலையையும் மேம்படுத்துகின்றன. பொதுவாக நாம் அனைவரும் நம் வீட்டின் இடத்துக்கு ஏற்ப செடிகளை வளர்க்க விரும்புகிறோம். ஆனால் வீட்டில் கண்டிப்பாக ஒரு இடத்தில் அனைவரும் செடி வைத்து இருப்பார்கள் அதுதான் பால்கனி.
நாம் எப்போதும் பால்கனியில் சில நிதானமான தருணங்களை செலவிடுகிறோம். நீங்கள் இங்கே உட்கார்ந்து தேநீர் அருந்தும்போது செய்தித்தாள்களைப் படிக்கிறீர்கள் அல்லது உங்கள் குடும்பத்துடன் பால்கனியில் நேரத்தை செலவிடுகிறீர்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்களைச் சுற்றி தாவரங்கள் இருக்கும்போது, நீங்கள் நிச்சயமாக நன்றாக உணர்கிறீர்கள். இருப்பினும், நீங்கள் உங்கள் பால்கனியில் தாவரங்களை வைத்திருக்கும் போது, வாஸ்து விதிகளை மனதில் கொள்ள வேண்டும். எனவே இன்று இந்தக் கட்டுரையில், பால்கனியில் செடிகளை வைக்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வாஸ்து விதியின் கீழ் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் பால்கனி கிழக்கு திசையில் அமைந்திருந்தால் துளசி செடியை கண்டிப்பாக வைக்க வேண்டும். இது தவிர, சாமந்தி பூ செடி போன்ற சில பூச்செடிகளை அங்கே வைக்கலாம் . குறிப்பாக, சாமந்தி செடியை வடகிழக்கு திசையில் வைப்பது குழந்தைகளின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
உங்கள் பால்கனி வடக்கு திசையில் இருந்தால் பெரிய செடிகளை அங்கே வைக்கவே கூடாது. இந்த திசையின் பால்கனியில் சிறிய தாவரங்கள் சிறந்ததாகக் கருதப்படுகின்றன. இங்கு மணி பிளாண்ட் வைப்பது நல்லது. இது தவிர கிராசுலா செடியையும் இங்கு வைக்கலாம்.
உங்கள் பால்கனி மேற்கு திசையில் அமைந்திருந்தால், நடுத்தர அளவிலான பச்சை செடிகளை இங்கு வைக்கலாம். இந்த செடிகளின் உயரம் 2 அடி முதல் 4 அடி வரை இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த திசையின் பால்கனியில் சிறிய செடிகளை வைத்திருப்பது எந்த பலனையும் தராது. சில பெரிய செடிகளை இங்கு வைத்தால் அது உங்கள் சனியை பலப்படுத்துகிறது. இது நீங்கள் முன்னேற புதிய பாதைகளை அமைக்கும்.
உங்கள் பால்கனியின் திசை தெற்காக இருந்தால், பெரிய மற்றும் கனமான செடிகளை இங்கு வைக்க வேண்டும். கருப்பு ஃபிகஸ் அல்லது பனை செடிகளை இங்கு வைக்கலாம். இது தவிர, மதுமால்டி அல்லது பூகேன்வில்லா போன்ற சில கொடிகளையும் இங்கே தொங்கவிடலாம். இது பால்கனியை அழகாக்குவதுடன் உங்கள் மரியாதையையும் அதிகரிக்கும்.

பால்கனியில் செடிகளை நடும் போதெல்லாம், சில செடிகளை தவிர்க்க வேண்டும். உதாரணமாக, உங்கள் பால்கனி எந்த திசையில் இருந்தாலும், பால்கனியில் கற்றாழை அல்லது ரப்பர் செடியை ஒருபோதும் நடக்கூடாது . பால் கொடுக்கும் தாவரங்கள் பால்கனிக்கு நல்லதாக கருதப்படுவதில்லை. இது தவிர பால்கனியில் உள்ள செடிகள் காய்ந்தால் உடனே அங்கிருந்து அகற்ற வேண்டும்.
image source: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]