தீபாவளி பண்டிகைக்கு புதிய பொருட்கள் வாங்குவதன் மூலம் வீட்டிற்கு செழிப்பை கொண்டு வரலாம். பண்டிகை காலத்தில் தங்கம், வெள்ளி, புதிய பாத்திரங்கள் மற்றும் இதர பொருட்கள் வாங்குவது வீட்டிற்குள் வளத்தையும், செல்வத்தையும் அதிகரிக்கும். சிறுக சிறுக சேமித்த பணத்தை செல்போன், வீட்டு உபயோகப் பொருட்கள் என நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை தீபாவளி ஆஃபரில் வாங்குவது தவறல்ல. எனினும் நல்ல நேரம் பார்த்து முக்கியமான சில பொருட்களை வாங்கிவிட்டால் வீட்டில் தானாக செல்வம் பெருகும்.
தங்கம் & வெள்ளி
தீபாவளி பண்டிகைக்கு தங்கம், வெள்ளி நகைகள் அல்லது தங்க நாணயங்கள் வாங்குவது இந்து மக்களின் வழக்கமாகும். தீபாவளி நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது வீட்டிற்கு வளத்தையும், செல்வத்தையும் கொண்டு வரும் என்று காலங் காலமாக நம்பப்படுகிறது.
பாத்திரங்கள்
தீபாவளிக்கு புதிய கிச்சன் பாத்திரங்கள் வாங்குவது கிச்சன் மற்றும் வீட்டின் செழிப்பை குறிக்கிறது. எனினும் ஜோதிடத்தின்படி இரும்பு மற்றும் எஃகு பாத்திரங்களை வாங்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. எனினும் செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை வாங்கலாம். பாத்திரங்களை வீட்டுக்கு கொண்டு வரும் போது அவை காலியாக இருக்க கூடாது. எனவே அதில் தண்ணீர் அல்லது அரிசி போட்டு வீட்டுக்கு கொண்டு வருவது நல்லதாகும்.
வீட்டு உபயோக பொருட்கள்
இக்காலத்தில் வீட்டு உபயோக பொருட்கள் அல்லது எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இது ஒருவரின் செளவுகரியத்திற்கு ஏற்ப வாங்கி கொள்ளலாம்.
நிலம் & வீடு
தீபாவளியை முன்னிட்டு நிலம் அல்லது வீடு வாங்குவது சிறப்பான விஷயமாகும். இவை உங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுகிறது. சிறந்த முதலீடாகவும் அமைகிறது.
விநாயகர் & லட்சுமி சிலை
விநாயகர் மற்றும் லட்சுமி சிலைகளை தீபாவளிக்கு வாங்குவது மிக முக்கியம். வீட்டில் இந்த சிலைகளை வைத்து பூஜித்தால் செல்வம் பெருகும், தடைகள் அகலும்.
வாகனங்கள்
தீபாவளி பண்டிகைக்கு பலரும் இருசக்கர வாகனம், கார் ஆகியவற்றை வாங்க ஆர்வம் காட்டுவர். இது அவர்களது வாழ்க்கையில் வெற்றியை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. ஜோதிடத்தின்படி தீபாவளிக்கு வாகனங்கள் வாங்குவது நல்லது. எனினும் ஒரு நாளுக்கு முன்னதாக முழு பணத்தை செலுத்திவிட்டால் வீட்டில் நேர்மறை ஆற்றல் தங்கும்.
துடைப்பம்
தீபாவளிக்கு நீங்கள் வாங்க திட்டமிட்ட பொருட்களின் விலை மிக அதிகமாக இருந்தால் கவலைப்பட தேவையில்லை. சாதாரண துடைப்பம் வாங்குவது கூட வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும். வீட்டிற்கு துடைப்பம் வாங்குவது கடன் சார்ந்த கவலைகளை உங்களிடம் இருந்து ஒதுக்கி வைக்கும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation