ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் பல வகையான தோஷங்களில் பித்ரு தோஷமும் ஒன்றாகும். ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ள எந்தவொரு நபரும் வாழ்க்கையில் சிரமங்களையும் பல ஏற்ற தாழ்வுகளையும் அனுபவிக்கிறார்கள். ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால், வாழ்க்கையில் பல வகையான பிரச்சினைகள் வரலாம். பித்ரு தோஷத்தின் அறிகுறிகளைப் புரிந்துகொண்டு அதிலிருந்து விடுபட நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம்.
பித்ர தோஷம் என்றால் என்ன?
நம் முன்னோர்கள் நாம் அவர்களை மறந்துவிட்டோம் அல்லது மதிக்கவில்லை என்று உணரும்போது, அவர்கள் நம் மீது கோபப்படுகிறார்கள், அவர்களின் சாபம் ஜாதகத்தில் பித்ர தோஷத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களது கோபத்தை பல வழிகளில் வெளிப்படுத்துவார்கள் பித்ர தோஷத்தை சில அறிகுறிகள் வைத்து கண்டறியலாம், அவை என்ன என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க: இந்த பொருட்களை வீட்டில் அலட்சியமாக தரையில் வைத்தால் நிதி இழப்பை சந்திக்க வேண்டி இருக்கும்
உணவில் முடி இருப்பது
உணவில் முடி இருப்பது நல்ல விஷயமாகக் கருதப்படுவதில்லை. பொதுவாக இது சுகாதாரத்துடன் தொடர்புடையது, ஆனால் இது மீண்டும் மீண்டும் நடந்தால், உங்கள் முன்னோர்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
துர்நாற்றம் வீசுவது
தினமும் வீட்டை சுத்தம் செய்த பிறகும், வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்தால், இதுவும் பித்ர தோஷத்தின் அறிகுறியாகும்.
நல்ல காரியங்கள் தடங்களில் முடிவாது
ஏதேனும் ஒரு சுப நிகழ்வில், நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்காத ஏதேனும் தடைகள் வந்தால், முன்னோர்களின் அதிருப்தியின் அறிகுறியாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
பித்ர தோஷத்தை தீர்க்கு பரிகாரங்கள்
பித்ர தோஷத்திற்கான பொதுவான பரிகாரங்கள் பிண்ட தானம், பாம்பு வழிபாடு, பிராமணருக்கு பசு தானம், கிணறு அல்லது குளம் கட்டுதல் ஆகியவை செய்யப்பட வேண்டும்.
பித்ரு பக்ஷத்தை போக்க உங்கள் ஜாதகத்தை ஒரு நல்ல பண்டிதரிடம் காட்டி, பித்ரு தோஷத்தின் வகைக்கு ஏற்ப பித்ரு தோஷ சாந்திக்கான பரிகாரத்தை மேற்கொள்ளுங்கள். நீங்கள் சிவபெருமானையும் பார்வதி தேவியையையும் தவறாமல் வணங்கினால், பித்ரு தோஷத்தால் ஏற்படும் அனைத்து வகையான பிரச்சனைகளும் தவிர்க்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று ஒரு பசுவுக்கு தவறாமல் உணவளிக்கவும். இது பித்ர தோஷத்தையும் குறைக்கும்.
தினமும் காலையில், சூரியனுக்கு ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அர்ப்பணித்து, சிவப்பு பூக்களை அர்ப்பணிக்கவும். இது பித்ரு தோஷத்தால் ஏற்படும் எதிர்கால பிரச்சனைகளையும் தவிர்க்கும்.
பித்ரு தோஷம் நீங்க அரச மரத்தை சுற்றி வர வேண்டும். நீங்கள் அரச மரத்தை 108 முறை சுற்றி வந்தால், பித்ரு தோஷம் நிச்சயமாக நீங்கும்.
மேலும் படிக்க: பாதங்களின் வடிவமைப்பை வைத்து ஆளுமையை கண்டறியக்கூடிய ஆன்மிக தகவல்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation