herzindagi
image

இந்த அரிய வகை பூக்களை உங்களை வாழ்க்கையில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தால், நல்லது நடக்கும்

சில மலர்கள் வாழ்க்கையில் பார்ப்பது அரிது, 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் அரிதான பிரம்ம கமலம் பூ மற்றும் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பூக்கும் கர்வி மலர்கள் போன்று சில பூக்கள் கண்டால் உங்கள் வாழ்க்கையில் பல அதிர்ஷ்டங்கள் நடக்கும்.
Editorial
Updated:- 2025-06-24, 14:59 IST

ஆன்மிக வழிபாடுகளில் மலர்களுக்கு மிகவும் முக்கிய பங்குகள் உண்டு. தெய்வ வழிபாடுகளுக்கு ஏற்றதுபோல் மலர்களை சூட்டுவார்கள், உதாரணமாகத் தாழம்பூ சிவபெருமானுக்கு உகந்த மலர்கள், பாரிஜாத மலர்கள் பெருமாளுக்கு விருப்பமானவை, தாமரை லட்சுமி தேவிக்கு பிடித்த பூ என்று அழைக்கப்படும், அதுபோல தெய்வங்களுக்குப் பிடித்த மலர்கள் பல வகைகளாக இருக்கிறது. அதே வேலையில் ஆன்மிக ரீதியாக சில மலர்களை எதிர்ச்சியாக நம் காண நேர்ந்தால்,  அதிர்ஷ்டம் என்று கூறலாம்.  இந்த வகையில் கண்களுக்கு அரிதாக தென்படும் இரண்டு மலர்களையும்,  அவற்றை பார்ப்பதால் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டத்தை பற்றி பார்க்கலாம்.  

அத்தி மர மலர்கள் குபேர தேவரின் வசிப்பிடமான

 

அத்தி மரத்தின் பூ பார்ப்பது அரிதானது மட்டுமல்ல, அதனுடன் தொடர்புடைய சில அறிகுறிகள் அதிர்ஷ்டத்தை தரக்கூடியது. யாராவது அத்திப் பூவைப் பார்த்தால் பல முக்கியமான அறிகுறிகள் அந்த நபரின் வாழ்க்கையில் தோன்றத் தொடங்குகின்றன. இந்த பூக்களின் சிறப்பு என்னவென்றால் வாழ்க்கையில் மங்களத்தை கொண்டு வர வேலை செய்கின்றன.

fig flower

 

அத்தி மர மலர்களின் அறிகுறிகள்

 

ஜோதிடத்தின் படி, அத்தி மரம் குபேர தேவரின் வசிப்பிடமாக நம்பப்படுகிறது. குபேர தேவர் செல்வத்தின் கடவுளாகக் கருதப்படுகிறார். மறுபுறம் , செழிப்பு, நல்ல அதிர்ஷ்டம், செல்வம், அன்பு மற்றும் மகிமை ஆகியவற்றை அளிக்கும் அறிகுறிகளாக கருதப்படுகிறது. இதனால் அத்திப் பூவைப் பார்த்தால் வீட்டில் குபேர தேவரின் வருகையை இருக்கும். மேலும், அது உங்கள் வாழ்க்கையில் சுக்கிரனின் மங்களம் வரப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும், இதன் காரணமாக நீங்கள் பல நேர்மறையான பலன்களை வாழ்க்கையில் காணலாம். அத்திப் பூவைப் பார்த்தால் மிகப்பெரிய பண லாபம் கிடைக்கப் போகிறது. உங்கள் நிதி நிலைமை விரைவாக மேம்படும். பணத்துடன் தொடர்புடைய எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், விரைவில் அதிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள்.

 

மேலும் படிக்க: திருமணம் நடப்பது போல கனவு கண்டால் என்ன அர்த்தம்? ஜோதிடம் கூறுவது என்ன?

யாராவது ஒரு அத்திப் பூவைப் பார்த்தால், அவரது வீட்டில் லட்சுமி தேவி வசிக்கிறார். அந்த நபரின் அதிர்ஷ்டம் மாறி, அவருக்கு எல்லா மகிழ்ச்சியும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவரது அரச நாட்கள் தொடங்கப் போகிறது. சமூகத்தில் அவரது மரியாதை அதிகரிக்கும்.

 

மேலும் படிக்க: ஜாதக ரீதியாக முகத்தில் தோன்றும் மச்சங்கள் மூலம் மற்றவர்கள் எண்ண ஓட்டத்தை அறியலாம்

 

நாகலிங்கம் பூக்களில் இருக்கும் மகிமை

 

நாகலிங்கம் பூக்களில் சிவப்பொருமன் குடியிருப்பதான நம்பப்படுகிறது. இந்த பூவை உள்ளங்கையில் வைத்து உற்றுப் பார்த்தால் முழு கைலாயத்தையே பார்ப்பது போன்ற வடிவமைப்பை கொண்டு இருக்கும். மறுபுறம் இந்த பூவை பார்த்தால் பாம்பு படுக்கையின் மீது லிங்க வடிவில் சிவபெருமான் காட்சி அளிப்பது போல் நாகலிங்கப்பூ இருக்கும். இந்த அற்புத வடிவமைப்பை கொண்ட பூக்களை பார்த்தால் செல்வ செழிப்பை கொடுக்கும். துஷ்ட சக்திகளை வீட்டிலிருந்து விரட்டக் கூடி தன்மை கொண்ட பூவாகும். நாகலிங்கப் பூவை தொட்டு பறிப்பதற்கு முன் சிவபஞ்சாக்ஷரத்தை 1001 முறை சொன்ன பிறகே தொட வேண்டும். அப்படி செய்தால் நல்ல பலனை சிவன் உங்களுக்கு அருளுவார்.

nagalinga flower

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]