வீட்டில் அமைதியும், செல்வமும் கிடைக்க இந்த திசைகளில் விளக்கேற்றவும்!

காலை மற்றும் மாலை என இருவேளைகளில் விளக்கேற்றி பூஜை அறைகளில் வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.

pooja room cleaning tips

நம்முடைய வாழ்க்கையில் சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்க வேண்டும் என்றால் வாஸ்து முறைப்படி சில விஷயங்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஜோதிடம் கூறுகிறது. சமையல் அறை முதல் பூஜை அறை, படுக்கை அறை என ஒவ்வொன்றிருக்கும் ஒரு விதமான வாஸ்து கணிப்புகள் உள்ளது. இந்த வரிசையில் இன்றைக்கு வீடுகளில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும் என்றால் எந்த திசைகளில் விளக்கேற்ற வேண்டும்? பூஜை அறையில் சாமி புகைப்படங்களை எந்த திசையில் வைக்க வேண்டும்? என்பது குறித்த முழு விபரங்கள் இங்கே.

puja room

விளக்கேற்ற உகந்த திசை:

வீட்டின் பூஜை அறை எப்போதுமே ஈசான்ய மூலையில் அமைந்திருக்க வேண்டும். ஒருவேளை அந்த திசையில் அமைப்பதற்கான கட்டமைப்பு இல்லையென்றால் வடகிழக்கு திசையில் அமைத்துக் கொள்ளலாம். மேலும் கழிவறை, குளியலறை அருகில் இறை வழிபாடு செய்வதற்கான பூஜை அறைகளை ஒருபோதும் அமைக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் இங்கு வைக்கப்படும் சாமி படங்கள், சாமி சிலைகள் அனைத்தும் கிழக்கு அல்லது தென்கிழக்குத் திசையை நோக்கி அமையும் படி வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

பூஜை செய்யும் முறை:

வீட்டின் மகிழ்ச்சியும், அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்பதற்கான இறைவழிபாடு மேற்கொள்கிறோம். இந்த அறையை எப்போதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தினமும் சுத்தம் செய்ய வேண்டும். காலை மற்றும் மாலை என இருவேளைகளில் விளக்கேற்றி பூஜை அறைகளில் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். வழிபாடு மேற்காள்ள நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஸ்கிரீன் துணியால் மறைத்து வைக்கவும்.

திரி பயன்படுத்தும் முறை:

ஒவ்வொரு வீடுகளிலும் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவ வேண்டும் என்பதற்காக ஏற்றப்படும் விளக்குகளை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். விளக்கு ஏற்றும் போது பழைய திரியைப் பயன்படுத்தக்கூடாது. தினமும் புதிய திரியைப் பயன்படுத்த முயற்சி செய்யவும். புதிய திரியில் விளக்கேற்றும் போது மனம் தூய்மையாகவும், நேர்மறை ஆற்றல் வெளிப்படும். இதோடு எப்போது விளக்கேற்றினாலும் எண்ணெய் ஊற்றிய பிறகு திரியைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு மாற்றாக திரியைப் போட்டு வைத்த பின்னதாக எண்ணெய் ஊற்றக்கூடாது.

pooja vastu tips

மேலும் படிக்க:உங்கள் வீட்டு சுவரில் இந்த படங்கள் இருந்தால் உடனே அகற்றிவிடுங்கள்-மன விரக்தியை எற்படுத்தும்!

சாமி புகைப்படங்கள் வைக்கும் திசை:

பூஜை அறைகளில் சிவன் சிலை அல்லது சிவலிங்கத்தை வைக்கிறீர்கள் என்றால் எப்போதும் வடக்கு திசையில் வைக்க வேண்டும். விநாயகர், துர்கை, முருகன் புகைப்படங்களை வைத்தால் கிழக்கு திசையில் வைக்க வேண்டும். மேலும் அனுமன், பைரவர் சிலைகளை தெற்கு திசையில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP