herzindagi
radish chips making

Radish Chips Recipe: முள்ளங்கி ல சிப்ஸ் செய்ய முடியுமா? இதோ ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக!

<span style="text-align: justify;">கால்சியம், வைட்டமின் சி,,பொட்டாசியம்,இரும்பு, மாங்கனீசு போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது முள்ளங்கி.&nbsp;</span>
Editorial
Updated:- 2024-02-21, 14:21 IST

முள்ளங்கியா? வேண்டாம் என்று சொல்லும் வார்த்தைகளைத் தான் அதிகளவில் கேள்விப்பட்டிருப்போம். குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களுக்குக் கூட முள்ளங்கியின் வாசனை வந்தால் சாப்பிடக்கூட மாட்டார்கள். அந்தளவிற்கு முள்ளங்கி மீதான பயம் மக்களிடம் அதிகளவில் உள்ளது. நாம் எதை  வேண்டாம் என்று எதை ஒதுக்கி வைக்கிறோமோ? அதில் தான் அத்துனை ஊட்டத்துக்கள் அடங்கியுள்ளது என முன்னோர்கள் கூறுவது போன்று முள்ளங்கியிலும் அத்துனை ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. கால்சியம், வைட்டமின் சி, ரிபோஃப்ளேவின்,நியாசின்,தியாமின்,வைட்டமின் B6,ஃபோலேட்,பொட்டாசியம்,இரும்பு, மாங்கனீசு போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது முள்ளங்கி. 

இவ்வாறு உடலுக்குத் தேவையான அத்துனை ஊட்டச்சத்துக்களையும் முள்ளங்கி கொண்டுள்ளதால், தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது உங்களது உணவு முறையில் சேர்த்துக்  கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதோடு உடலுக்குத் தேவையான ஆற்றல்கள் அனைத்தையும் பெற முடியும் என்பதால் இனிமேலாவது உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள மறந்துவிடாதீர்கள். முள்ளங்கி சாம்பார், முள்ளங்கி பொரியல், முள்ளங்கி பருப்பு கூட்டு, முள்ளங்கி சாப்ஸ், முள்ளங்கி வடை என உங்கள் நாவிற்கு எது சுவையைக் கொடுக்கிறதோ? அதை செய்து சாப்பிடுங்கள். இன்றைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிப்ஸ்களை எப்படி முள்ளங்கி பயன்படுத்தி சுலபமாக செய்ய முடியும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம். இதோ ரெசிபி டிப்ஸ் இங்கே..

radish special recipes

மொறுமொறு முள்ளங்கி சிப்ஸ்:

தேவையான பொருட்கள்:

  • முள்ளங்கி - 10
  • கடலை மாவு- 2 கப்
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு- சுவைக்கு ஏற்ப

செய்முறை:

  • முதலில் முள்ளங்கிரயை லேசாக தோல் சீவி வட்டமாக வெட்டிக்  கொள்ளவும். தடினமாக இல்லாமல் லேசாக வெட்டினால் தான் பொரிக்கும் போது மொறு மொறுப்பு கிடைக்கும் என்பதால் முள்ளங்கியை லேசாக வெட்டிக் கொள்ளவும்.
  • ஒரு பெரிய பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். பின்னர் ஏற்கனவே வெட்டி வைத்துள்ள முள்ளங்கியை சேர்த்து 5 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடவும்.
  • இதையடுத்து ஒரு கடாயில்  பொரிக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய்ந்தும், ஊற வைத்துள்ள முள்ளங்கியைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும். பின்னர் பெரிய பாத்திரத்திற்கு மாற்றி லேசாக உப்பு தூவினால் போதும் சுவையான முள்ளங்கி சிப்ஸ் ரெடி.

radish special

  • ஒருவேளை உங்களுக்கு சிப்ஸ் கொஞ்சம் காரசாரமாக வேண்டும் என்று நினைத்தால், கடலை மாவுடன் கரம் மசாலா அல்லது மிளகாய் தூள் சேர்த்து முள்ளங்கியைப் போட்டு பொரித்து எடுத்தால் போதும். மொறு மொறு முள்ளங்கி சிப்ஸ் ரெடி. 

Image source- Google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]