herzindagi
egg lollipop snacks

Egg Lollipop Recipe: சிக்கன் போன்று முட்டையிலும் லாலிபாப் செய்யலாமா? இதோ சிம்பிள் ரெசிபி டிப்ஸ்!

இந்திய ரெசிபிகளில் ஒன்றான முட்டை லாலிபாப் ரெசிபியை சுலபமாக செய்வது குறித்த சமையல் குறிப்புகள்
Editorial
Updated:- 2024-02-13, 18:00 IST

ஒவ்வொரு வீட்டிலும் தங்களது குழந்தைகளுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் உணவுகள் என்ன செய்துக் கொடுக்கலாம்? என யோசிக்கும் பெற்றோர்களில் ஒருவராக நீங்கள்? அப்படின்னா இதோ உங்களுக்காகவே குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சிக்கன் லாலி பாப்  போன்று முட்டையிலும் லாலி பாப் செய்து அசத்தலாம். ஒருமுறை நீங்கள் செய்துக் கொடுத்துப் பாருங்களேன். இனி கடைகளில் விதவிதமான ஸ்நாக்ஸ்களை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு இருக்காது. இந்திய ரெசிபிகளில் ஒன்றான முட்டை லாலி பாப் எப்படி செய்யலாம்? என்னென்ன மசாலா பொருள்கள் தேவை? என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

lollipop

குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை லாலிபாப்:

தேவையான பொருட்கள்: 

  • முட்டை - 5 அல்லது 6
  • வெங்காயம் - 10
  • பச்சை மிளகாய் - 5
  • மிளகாய் தூள்-  1 டீஸ்பூன்
  • கரம் மசாலா- அரை டீஸ்பூன்
  • சீரகத் தூள் - அரை டீஸ்பூன்
  • மிளகு தூள் - தேவையான அளவு
  • பிரெட் தூள்- சிறிதளவு
  • இஞ்சி பூண்டு விழுது-  தேவையான அளவு
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு
  • சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
  • சோயா சாஸ் -   1 டீஸ்பூன்

egg lollipop making

செய்முறை:

  • முட்டை லாலி பாப் செய்வதற்கு முதலில் முட்டைகளை வேக வைக்கவும். 
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம் மசாலா, சோள மாவு, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கு உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். பின்னர் இதனுடன்  இஞ்சி-பூண்டு விழுது மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைத்து வைத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து வேக வைத்த முட்டைகளை துருவிக் கொள்ள வேண்டும். பின்னர்  ஏற்கனவே கலக்கி வைத்துள்ள மாவு கலவையுடன் துருவிய முட்டைகளை கலந்து வைத்துக் கொண்டு சிறிய சிறிய உருண்டையாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும்.
  • மற்றொரு பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். பின்னர் இதனுடன் உருண்டையாகப்பிடித்து வைத்துள்ள முட்டை கலவையில் போட்டு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். 
  • இதையடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிடித்து வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எரிக்க வேண்டும்.
  • இறுதியில் பொரித்த முட்டைகளின் மீது டூத் ஸ்டிக்கை சொருகினால் போதும் சுவையான முட்டை லாலிபாப் ரெடி.

egg lollipop making tips

இதையடுத்து  சோயா சாஸ் அல்லது சில்லி சாஸை லாலிபாப் மேல் ஊற்றி குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக கொடுங்கள். நிச்சயம் இனி சிக்கன் லாலி பாப் வேண்டாம். முட்டை லாலிபாப் செய்துக் கொடுக்க சொல்லி அடம்பிடிப்பார்கள். 

 Image Credit - Google

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]