herzindagi
aval pongal for breakfast

10 Minutes Breakfast Recipe : காலை உணவுக்கு அவல் பொங்கல் செய்து அசத்துங்க! உப்புமா செய்வதை விட இது ஈஸி!

காலை உணவுக்கு என்ன செய்வதென்று குழப்பமா? வீட்டில் அவல் இருந்தால் ஒரு முறை இது போல அவல் பொங்கல் செய்து அசத்துங்க...
Editorial
Updated:- 2023-06-08, 15:50 IST

காலையில் பரபரப்பாக வேலை நடக்கும் பொழுது, கை கொடுப்பது இட்லியும் தோசையும் தான். ஆனால் மாவு தீர்ந்து விட்டால்? கவலை வேண்டாம் இருக்கவே இருக்கு உப்மா. அதுவும் ஒரு நாளைக்கு மேல் நீண்டால் வீட்டில் எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்து விடும். காலை உணவு வித்யாசமாக இருக்க வேண்டும். அதே சமயம் எளிதில் செய்யக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

காலை உணவு மிகவும் முக்கியமானது. உங்களை புத்துணர்ச்சியாகவும், ஆற்றலுடனும் வைத்திருக்க நல்ல ஆரோக்கியமான காலை உணவை சாப்பிட வேண்டும். அந்த வகையில் ஈஸியான அதே சமயம் ஆரோக்கியமான ஒரு காலை உணவை இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம். உண்மையில் உப்புமா செய்வதை விட இது மிகவும் சுலபம். பருப்பை குக்கரில் வேக வைத்து இறக்கினால் போதும் சட்டுனு பத்து நிமிஷத்தில் காலை உணவை செய்திடலாம்.  அவல் பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்:  பிரியாணினா இப்படி இருக்கனும், நீளமா உதிரி உதிரியா பக்குவமா செஞ்ச வெஜிடபிள் பிரியாணி!

 

தேவையான பொருட்கள்

poha breakfast recipes

  • அவல் - ½ கப் 
  • பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன் 
  • நெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • மிளகு - ¼ டீஸ்பூன்
  • பெருங்காயம் - ¼ டீஸ்பூன்
  • சீரகம் - ½ டீஸ்பூன்
  • கருவேப்பிலை - சிறிதளவு
  • நறுக்கிய இஞ்சி - ½ டீஸ்பூன்
  • உடைத்த முந்திரி பருப்பு - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

aval pongal

  • முதலில் அவலை 2-3 முறை கழுவி, தண்ணீரில் நன்கு அலசிய பின் வடித்து வைக்கவும். பருப்பு வேக வைக்கும் முன் இதை செய்ய மறக்காதீர்கள்.
  • இப்போது ஒரு பிரஷர் குக்கரில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து பாசிப்பருப்பை மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  • இதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் சிறிதளவு சீரகம் சேர்த்து வேக வைக்கவும்.
  • 3-4 விசில் வந்த பிறகு அடுப்பை அணைக்கவும்.
  • விசில் அடங்கிய பிறகு குக்கரின் மூடியை திறந்து பாசிப்பருப்பை நன்கு மசித்து கொள்ளவும்.
  • பருப்பு மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.  
  • இந்த பருப்பு கலவையை மீண்டும் சூடாக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் ஊற வைத்துள்ள அவல் சேர்த்து நன்கு மசித்து கலக்கவும்.
  • அவல் மற்றும் பருப்பு ஒன்று சேர கலந்து பொங்கல் பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைக்கவும்.
  • இப்போது உங்களை தாளிப்பதற்கு ஒரு கடாய் அல்லது தாளிப்பு கரண்டியில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
  • இதனுடன் உடைத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  • முந்திரியின் நிறம் மாறத் தொடங்கும் பொழுது மிளகு, சீரகம், இஞ்சி, கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். தாளிப்பு கருகாமல் கவனமாக பார்த்துக் கொள்ளவும்.
  • நீங்கள் விரும்பினால் மிளகு சீரகத்தை இடித்தும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • பின்னர் தாளிப்பை உங்களுடன் சேர்த்து நன்கு கிளறி சூடாக பரிமாறவும்.
  • மிகவும் சுலபமான இந்த அவல் பொங்கல் ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

 

இந்த பதிவும் உதவலாம்:  நாக்கில் எச்சில் ஊறும் கரும்பு ஜூஸ் மிட்டாய்... வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]