தாய்ப்பால் கட்டிக்கொண்டால் இந்த வீட்டு வைத்தியத்தை செய்யுங்க, உடனே வலி குறையும்

தாய்மார்கள் ஒரு பக்க மார்பகத்தில் மட்டுமே குழந்தைக்கு பால் கொடுப்பது அல்லது அதிகம் பால் சுரக்கும் போது குழந்தைக்கு பால் கொடுக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் இந்த பால் கட்டிக்கொள்ளும் பிரச்சனை ஏற்படும்.
image

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அடிக்கடி இந்த பால் கட்டிக் கொள்ளும் பிரச்சினை ஏற்படும். ஒரு பக்க மார்பகத்தில் மட்டுமே பால் கொடுப்பது அல்லது அதிகம் பால் சுரக்கும் போது குழந்தைக்கு பால் கொடுக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் இந்த பிரச்சனை ஏற்படும். இதனால் பால் சிறு சிறு கட்டிகளாக உறைந்து, மார்பகத்தில் கொப்புளங்கள் உண்டாகின்றன. இது பால் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, பால் வெளியேறாமல் தேங்க வைக்கிறது. இந்த நிலை சில நேரங்களில் தானாக குணமாகிவிடும். அந்த வரிசையில் பால் கட்டிக்கொண்டால் அதை சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சூடு ஒத்தடம்:


மார்பகத்தில் சூடான துணியை வைப்பது பால் குழாய்களைத் திறக்க உதவுகிறது. ஒரு சுத்தமான துணியை சூடான நீரில் நனைத்து, பால் கட்டியுள்ள பகுதியில் 5-10 நிமிடம் வைக்கவும். இதை ஒரு நாளில் நாளில் 3-4 முறை செய்தால், பால் சுரப்பது எளிதாகி வலி குறையும்.


மசாஜ் செய்தல்:


பால் கட்டி கொண்ட மார்பகத்தை விரல்களால் மெதுவாக வட்டமாக மசாஜ் செய்யவும். தேங்காய் எண்ணெய் அல்லது வெந்நீரைப் பயன்படுத்தி, பால் குழாய்கள் திறக்கும் வகையில் மென்மையாக தடவுங்கள். ஆனால் அதிக அழுத்தம் கொடுக்காதீர்கள்.

How_to_massage_c4c26557-7556-4068-be89-5ed1addfefa5

குழந்தைக்கு அடிக்கடி பால் கொடுத்தல்:


பால் கட்டி கொண்டால், குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுக்கவும். உங்கள் குழந்தையின் உறிஞ்சுதல் பால் குழாய்களைத் திறக்க உதவுகிறது. வலி இருந்தாலும், சரியான பிடியில் குழந்தையை வைத்துப் பால் கொடுப்பது நல்லது.


வெங்காயம் மற்றும் பூண்டு:


வெங்காயம் மற்றும் பூண்டில் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி உள்ளது. ஒரு வெங்காயத்தை நறுக்கி, அதை வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் காத்திருக்கவும். அல்லது பூண்டை எண்ணெயில் வதக்கி, அந்த எண்ணெயை மார்பகத்தில் பூசலாம்.

onions-and-garlic-in-childrens-health-jpg

துளசி இலைகளின் பயன்:


துளசி இலைகளை அரைத்து, பால் அடைப்பு உள்ள பகுதியில் பூசி 10-15 நிமிடம் விட்டுவிட்டு கழுவவும். இது வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும்.


அதிக தண்ணீர் குடியுங்கள்:


உடலில் நீர் குறைவாக இருந்தால், தாய்மார்களுக்கு தாய்ப்பால் கட்டிக்கொள்ளும் பிரச்சனை ஏற்படும். எனவே, தினமும் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். இது பாலை மென்மையாக்கி அடைப்பைத் தடுக்கும்.

water-types-scaled

வெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய்:


கடுகு எண்ணெய் அல்லது வெண்ணெயை சற்று சூடாக்கி, பால் அடைப்பு உள்ள இடத்தில் தடவினால், பால் குழாய்கள் திறக்கும்.

மேலும் படிக்க: உங்க குழந்தை சரியா சாப்பிடுவதில்லையா? வசம்பை எடுத்து இப்படி பயன்படுத்தி பாருங்க

குறிப்பு:


இது போன்ற வீட்டு வைத்தியங்கள் முயற்ச்சிக்கும் போது மார்பகத்தில் அதிக வலி அல்லது காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். அதே போல தாய்மார்களுக்கு போதுமான ஓய்வு மற்றும் சத்தான உணவு அவசியம்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP