இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலருக்கும் மாதவிடாய் சுழற்சி ஏற்படுவது வழக்கம். இதற்கு ஒரு முக்கிய காரணம் pcod pcos போன்ற உடல்நல பிரச்சனைகள் தான். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்றால் என்ன என்று பலருக்கும் சந்தேகம் உள்ளது. பெண்களுக்கு ஏற்படும் கருப்பை நீர்க்கட்டி (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் - PCOS) என்பது உடலில் ஹார்மோன் அளவுகள் சீரற்று இருப்பதால் உருவாகும் ஒரு நிலை. இது கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் பெண்களுக்கு நீண்டகால ஆரோக்கியப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் மாதவிடாய் சுழற்சி, எடை அதிகரிப்பு, எடை குறைவு, முடி உதிர்வு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இந்த PCOS நிலையை கட்டுப்படுத்த உதவும் மூலிகைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பொதுவாக, 24 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைப் பேறு வயதில் உள்ள 10 பேரில் ஒருவர் இதனால் பாதிப்படைகிறார். ஆனால், இந்தப் பிரச்சனையை சந்திக்கும் பாதிப்பேரில் பாதி பேர் மட்டுமே சிகிச்சை பெறுகிறார்கள்.
கருப்பை நீர்க்கட்டிகள் கருமுட்டை வெளியேறுவதைத் தடுக்கின்றன. இதனால் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன; கருச்சிதைவு உள்ளிட்ட பிற சிக்கல்களும் தோன்றலாம். இந்த நிலையைப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். இது பெண்களுக்கு நம்பிக்கையைத் தரும் மட்டுமல்லாமல், அறிகுறிகள், நோயறிதல், சிகிச்சை, வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றை நிர்வகிக்கவும் உதவும். மகப்பேறு மருத்துவர், கருவுறுதல் நிபுணர், உணவியல் நிபுணர், தோல் மருத்துவர், உளவியலாளர் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களின் ஆலோசனை இதற்கு உதவும்.
இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால், இதன் அறிகுறிகளைக் கண்டறிந்து அவற்றின் தாக்கத்தைக் குறைக்கலாம். PCOS உள்ள பெண்கள் தனிப்பட்ட கவனிப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களில் கவனம் செலுத்த வேண்டும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வதுடன், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதும் முக்கியம். குறிப்பாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கு இது உதவும்.
அஸ்வகந்தா "மூலிகைகளின் ராஜா" என்று அழைக்கப்படுகிறது. இது நம் உடலில் கார்டிசோல் ஹார்மோன் உற்பத்தியைக் குறைத்து மன அழுத்தத்தைக் குறைக்கும். மேலும், இனப்பெருக்க ஹார்மோன்களை சீராக்கி, PCOS அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
தான்றிக்காய், கடுக்காய் மற்றும் நெல்லிக்காய் ஆகியவை சேர்ந்தது தான் இந்த திரிபலா. இது ஜீரணத்தை சீர்படுத்தி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தினமும் திரிபலா சாப்பிடுவதால், கருப்பை நீர்க்கட்டியின் தீவிரம் குறையும். இந்த திரிபலாவை பாலில் கலந்து இரவில் குடித்து வரலாம்.
மேலும் படிக்க: மாதவிடாய் வலியை குறைக்கும் இயற்கை பானம்; வெறும் வயிற்றில் குடித்து பாருங்க
பொதுவாகவே வெந்தயம் உடல் சூட்டைத் தணிக்கும். இதில் உள்ள பைட்டோஈஸ்ட்ரோஜன்கள் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கின்றன. இது மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தி, உடல் பருமன் மற்றும் PCOS பிரச்சனைகளைக் குறைக்கும். இதனால் தான் மாதவிடாய் நாட்களில் வயிறு வலி ஏற்பட்டால் ஒரு கிளாஸ் தண்ணீரில் வெந்தயத்தை சேர்த்து குடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
அதிமதுரத்தில் அதிக அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது ஹார்மோன் சீரமைப்பில் பங்குவகிக்கிறது. கருப்பை நீர்க்கட்டிகளைக் குறைப்பதோடு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் சருமப் பிரச்சனைகளையும் தீர்க்கும்.
Image source: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]