கர்ப்ப காலத்தில், உங்கள் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனெனில், நீங்கள் சாப்பிடும் உணவு, உங்கள் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல உங்கள் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திலும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒரு சில உணவுகள் ஆரோக்கியமானதாகவே இருந்தாலும், அவற்றை கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ஆனால் கர்ப்ப காலத்தில் தாராளமாக முட்டை சாப்பிடலாம். முட்டையில் புரதத்துடன், வைட்டமின் B12, ஒமேகா-3, தாமிரம், மெக்னீசியம், செலினியம் போன்ற பல வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. இவை கர்பிணி பெண்களுக்கு ஏராளமான நன்மைகள் அளிக்கின்றன.
முட்டை, உங்கள் கர்ப கால ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இருப்பினும் கர்ப காலத்தில் முட்டை சாப்பிடும் போது சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே, இன்று இந்த பதிவில், மத்திய அரசு மருத்துவமனையான ஈஎஸ்ஐசி மருத்துவமனையின், உணவியல் நிபுணர் ரிது பூரி அவர்கள், கர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடும் போது நீங்கள் எந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
கர்ப்ப காலத்தில் ஒரு போதும் பச்சை முட்டை சாப்பிடக்கூடாது. முட்டைகளை வைத்து பல வகையான ரெசிபிகளை சமைத்து சாப்பிடலாம். ஆனால் தவறியும் கூடப் பச்சை முட்டை சாப்பிட்டு விடாதீர்கள். பச்சை முட்டை சாப்பிடுவதால் கருக்கலைப்பு ஏற்படுவதற்கான அபயாம் பன்மடங்கு அதிகரிக்கிறது. இது தவிர, கெட்டுப்போன அல்லது ஏற்கனவே உடைந்த முட்டைகளை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். இது கர்ப்ப காலத்தில் தொற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: கர்ப்பக்காலத்தில் காளான் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?
கர்ப்ப காலத்தில் வெளியே சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுவதில்லை. சில நேரங்களில் உணவகங்களில் பச்சை முட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே, அத்தகைய வாய்ப்பைத் தவிர்க்க, வீட்டிலேயே முட்டை சமைத்து சாப்பிடுங்கள். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில், காலை உணவுடன் முட்டை சேர்த்து சாப்பிட முயற்சி செய்யுங்கள். இந்த நேரத்தில் உங்கள் வளர்சிதை மாற்றம் மிக அதிகமாக இருக்கும். இந்நிலையில் காலை உணவில் முட்டை சாப்பிடுவதால் அஜீரண பிரச்சனை வராது. எனவே, காலை உணவில் முட்டை சேர்த்துக்கொள்வதே சிறந்தது.
இந்த பதிவும் உதவலாம்: கர்ப்பிணிகளுக்கான பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா மூலம் 6 ஆயிரம் ரூபாய் பெறுவது எப்படி?
இதுவும் ஒரு முக்கியமான குறிப்பு, இதை நீங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடுவது நல்ல பலன்களைத் தரும் என்பது உண்மைதான். ஆனால் அதன் உட்கொள்ளுதல் அளவை கவனித்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முட்டைகள் சாப்பிடலாம். இதற்கு மேல் அதிகமாக சாப்பிடுவது உங்களுக்கும் உங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]