ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் கர்ப்பக்காலம் என்பது மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் பெண்கள் அதிக கவனத்துடன் தங்களையும் வயிற்றுக்குள் இருக்கும் தங்களுடைய கருவையும் கவனித்து கொள்ள வேண்டும். குறிப்பாகக் கருவுற்ற பெண் தான் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாத உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இதில் குழப்பத்தைத் தரும் பழங்கள், காய்கறிகள், உணவுகள் ஏராளம் உள்ளன. கர்ப்ப காலத்தில் இதை சாப்பிடலாமா? வேண்டாமா? என கர்ப்பிணிகள் குழப்பம் அடைவார்கள். இந்த பட்டியலில் மஷ்ரூமூம் ஒன்று. கர்ப்பக்காலத்தில் மஷ்ரூம் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்ற சந்தேகம் கர்ப்பிணிகளுக்கு இருக்கும். இந்த சந்தேகத்திற்கான விடையை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இதுக் குறித்த மருத்துவ கருத்துகளையும் அறிவோம் வாருங்கள்.
மஷ்ரூம் குறைந்த கலோரிகள் கொண்ட உணவாகும். இதில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உடல் ஆரோக்கியத்திற்கு மஷ்ரூம் மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது பாதுகாப்பானதா என்ற சந்தேகம் நிலவுகிறது. இது குறித்த விளக்கத்தை ESIC மத்திய அரசு மருத்துவமனையின் உணவியல் நிபுணர் ரிது புரி அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
கர்ப்பக்காலத்தில் மஷ்ரூம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
கர்ப்பக்காலத்தில் பெண்கள் மஷ்ரூம்களை உட்கொள்வது மிகவும் நல்லது. மஷ்ரூமில் பல வகையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது கர்ப்பிணிப் பெண் மற்றும் கருவில் வளரும் குழந்தைக்கும் பல நன்மைகளைத் தருகிறது. இது மட்டுமின்றி, கர்ப்பக்காலத்தில் உடலுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் D யும் இதில் உள்ளது. இது பெண்களின் எலும்புகளைப் பலப்படுத்துகிறது. மஷ்ரூம்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. இதனால் கர்ப்பக்காலத்தில் ஒரு பெண் அடிக்கடி நோய் வாய்ப்படுவது தடுக்கப்படுகிறது. அதே போல் மஷ்ரூமில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபினை உருவாக்க உதவுகிறது. கர்ப்பக்காலத்தில் பெண்களுக்குக் கூடுதல் ஹீமோகுளோபின் தேவைப்படுகிறது. இதில் உள்ள துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் செலினியம் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
கர்ப்பக்காலத்தில் மஷ்ரூம் சாப்பிடலாமா? வேண்டாமா?
கர்ப்பக்காலத்தில் பெண்கள் மஷ்ரூம்களை தாராளமாக சாப்பிடலாம். ஆனால் மஷ்ரூம் சாப்பிடும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உதாரணமாக, மார்க்கெட்டில் பல வகையான மஷ்ரூம்கள் கிடைக்கின்றன. இதில் பாராசோல் மஷ்ரூம் மற்றும் போலி மோரல்ஸ் மஷ்ரூம்களை கர்ப்பக்காலத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
மஷ்ரூம்களை சாப்பிடும்போது நினைவில் கொள்ள வேண்டியவை
- கர்ப்பக்காலத்தில் மஷ்ரூம்களை உட்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதை பாதுகாப்பான முறையில் சாப்பிட வேண்டும். உதாரணமாக:
- நீங்கள் மஷ்ரூம் சாப்பிடலாம், ஆனால் அதை குறைந்த அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
- மஷ்ரூம்களை ஒருபோதும் பச்சையாக உட்கொள்ளக் கூடாது. நன்றாகக் கழுவி சமைத்த பின்னரே சாப்பிட வேண்டும்.
- மஷ்ரூம்களை ஃப்ரஷாக வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். சமைப்பதற்கு முன் அதில் கறையோ பூச்சியோ இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- நீங்கள் மஷ்ரூம் சாப்பிடுவதற்கு முன்பு, உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. ஏனெனில், ஒவ்வொரு பெண்ணின் கர்ப்பக்காலமும் வேறுபடும். ஒரு சில பெண்களுக்கு மஷ்ரூம் உட்கொள்வது ஒத்துக்கொள்ளாமல், சில பிரச்சனைகள் ஏற்படலாம்.

மஷ்ரூமை உட்கொண்ட பிறகு நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தாலோ அல்லது வயிற்று வலி, வாந்தி போன்ற வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டாலோ, மஷ்ரூம் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.
இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்தை கமெண்டில் தெரியப்படுத்துங்கள். இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்ய மறவாதீர்கள். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்..
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation