herzindagi
image

கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க; செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை இதோ

கர்ப்பிணி பெண்களை சுற்றி இருக்கும் பலரும் இதை சாப்பிடு அதை சாப்பிடாதே என்று கூறுவார்கள். கர்ப்பிணிப் பெண்கள் சில விஷயங்களைப் பின்பற்றினால் ஆரோக்கியமான கர்ப்பத்தைக் கொண்டிருக்கலாம். 
Editorial
Updated:- 2025-05-28, 17:12 IST

கர்ப்பகாலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான அழகான பயணம். இந்த நேரத்தில் சரியான பராமரிப்பும், கவனமும் மிகவும் அவசியம். கர்ப்பிணி பெண்களை சுற்றி இருக்கும் பலரும் இதை சாப்பிடு அதை சாப்பிடாதே என்று கூறுவார்கள். கர்ப்பிணிப் பெண்கள் சில விஷயங்களைப் பின்பற்றினால் ஆரோக்கியமான கர்ப்பத்தைக் கொண்டிருக்கலாம். அந்த வரிசையில் கர்ப்பிணிப் பெண்கள் பின்பற்ற வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

உணவுப் பழக்கங்கள்:


செய்ய வேண்டியவை:

 

  • பழங்கள், பச்சை காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
  • இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.
  • தூய்மையான தண்ணீரை அதிகம் குடிக்கவும்.


தவிர்க்க வேண்டியவை:

 

  • பாக்கு, மது, சிகரெட் போன்றவற்றை தவிர்க்கவும்.
  • கெட்டுப்போன அல்லது கெமிக்கல் கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.
  • அதிக காபி மற்றும் டீ அருந்துதல் தவிர்க்க வேண்டும்.

shutterstock_699289897-978b88111dfa470c9cf33189199084fc

உடல் பயிற்சி மற்றும் ஓய்வு:


செய்ய வேண்டியவை:

 

  • மிதமான உடற்பயிற்சிகள் (நடைபயிற்சி, யோகா, மூச்சு பயிற்சி) செய்வது நல்லது.
  • போதுமான அளவு ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • தூக்கத்தை கண்டிப்பாக பராமரிக்கவும்.


தவிர்க்க வேண்டியவை:

 

  • கடினமான உடற்பயிற்சிகள் அல்லது எடை தூக்குதல் தவிர்க்கவும்.
  • அதிக நேரம் நிற்பது அல்லது உட்கார்ந்திருப்பது தவிர்க்க வேண்டும்.

மருத்துவ பரிசோதனைகள்:


செய்ய வேண்டியவை:

 

  • கர்ப்பகாலத்தில் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
  • டாக்டரின் ஆலோசனையின்படி தேவையான ஊட்டச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.


தவிர்க்க வேண்டியவை:

 

  • மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடக்கூடாது.
  • கர்ப்பகாலத்தில் எக்ஸ்ரே போன்ற கதிர்வீச்சு சிகிச்சைகளை தவிர்க்கவும்.

Why-Regular-Check-Up-Is-Necessary-During-Pregnancy

மன ஆரோக்கியம்:


செய்ய வேண்டியவை:

 

  • மன அழுத்தத்தை குறைக்க இசை, தியானம் போன்றவற்றை பின்பற்றலாம்.
  • குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தினமும் நேரத்தை செலவிடுங்கள்.


தவிர்க்க வேண்டியவை:

 

  • மன அழுத்தம் மற்றும் கவலைகளை தவிர்க்கவும்.
  • எதிர்மறையான சிந்தனைகளை விலக்கி வைக்கவும்.

பாதுகாப்பு மற்றும் கவனம்:


செய்ய வேண்டியவை:

 

  • விபத்துகளிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
  • சூடான நீரில் குளித்தல், அதிக நேரம் குளியல் தவிர்க்கவும்.


தவிர்க்க வேண்டியவை:

 

  • வெளியில் அதிகம் பயணிப்பது தவிர்க்க வேண்டும்.
  • அதிக வெப்பம் அல்லது குளிர் பகுதிகளுக்குச் செல்லாமல் இருங்கள்.

மேலும் படிக்க: மன அழுத்தம் கருவுறுதலை பாதிக்குமா? தாம்பத்திய உறவை எவ்வாறு பாதிக்கும் தெரியுமா?

கர்ப்பகாலத்தில் சிறிய கவனக்குறைவும் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கலாம். எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள "செய்ய வேண்டியவை" மற்றும் "தவிர்க்க வேண்டியவை" பட்டியலை கடைபிடிப்பது கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒரு ஆரோக்கியமான கர்ப்பகாலத்திற்கு சரியான உணவு, உடற்பயிற்சி, மருத்துவ கவனிப்பு மற்றும் மன ஆரோக்கியம் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Image source: google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]