herzindagi
image

கர்ப்பிணிகள் ராகி சாப்பிடலாமா? உடலுக்கு என்ன ஆகும் தெரிஞ்சிக்கோங்க

ராகி என்று கூறப்படும் கேழ்வரகு என்பது ஒரு முக்கியமான தானியம், இது கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இந்தக் கட்டுரையில், கர்ப்பிணி பெண்களுக்கு ராகி உணவின் நன்மைகள் குறித்தும் அதை உணவில் சேர்த்து எப்படி சாப்பிடலாம் என்றும் விரிவாகப் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2025-06-05, 17:10 IST

கர்ப்பகாலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிகவும் முக்கியமான கட்டம். இந்த நேரத்தில் உணவில் சத்தான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். முதல் மூன்று மாதத்தில் நீங்கள் சாப்பிடும் உணவு தான் சிசுவின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும். ராகி என்று கூறப்படும் கேழ்வரகு என்பது ஒரு முக்கியமான தானியம், இது கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இந்தக் கட்டுரையில், கர்ப்பிணி பெண்களுக்கு ராகி உணவின் நன்மைகள் குறித்தும் அதை உணவில் சேர்த்து எப்படி சாப்பிடலாம் என்றும் விரிவாகப் பார்க்கலாம்.

இரும்புச்சத்து நிறைந்தது:


கர்ப்பகாலத்தில் இரத்தம் அதிகரிப்பதால், இரும்புச்சத்து அதிகம் தேவைப்படுகிறது. ராகியில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது, இது இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இரத்தசோகை (அனிமியா) போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

ragi1

கால்சியம் சத்து அதிகம்:


கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் மிகவும் அவசியம், ஏனெனில் கருவின் எலும்பு வளர்ச்சிக்கு இது உதவுகிறது. ராகியில் கால்சியம் அதிகம் இருப்பதால், இது தாயின் எலும்புகளை வலுப்படுத்துவதுடன் குழந்தையின் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.


புரதம் நிறைந்தது:


புரதம் என்பது கர்ப்பகாலத்தில் முக்கியமான ஒரு ஊட்டச்சத்து. ராகியில் அதிக புரதம் உள்ளது, இது தாயின் தசைகள் மற்றும் கருவின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது கர்ப்பிணி பெண்களுக்கு ஆற்றலை அதிகரிக்கும்.

download_1737700829624_Untitled-design---2021-12-15T144822.379-min_7r57f1

நார்ச்சத்து உள்ளது:


கர்ப்பகாலத்தில் மலச்சிக்கல் (கான்ஸ்டிபேஷன்) ஒரு பொதுவான பிரச்சனை. ராகியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மென்மையாக்கி, மலச்சிக்கலை குறைக்க உதவுகிறது. மேலும், இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும்.


போலிக் அமிலம்:


கர்ப்பிணி பெண்களுக்கு போலிக் அமிலம் மிகவும் முக்கியம், ஏனெனில் இது கருவின் மூளை மற்றும் முதுகெலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. ராகியில் போலிக் அமிலம் உள்ளது, இது கருவின் நரம்புக் கோளாறுகளை தடுக்க உதவுகிறது.

folic

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது:


ராகியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது தாயின் உடலில் உள்ள நச்சுத்தன்மையை குறைத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது கர்ப்பகாலத்தில் தொற்று மற்றும் அழற்சியை தடுக்க உதவுகிறது.


ஆற்றலை அதிகரிக்கும்:


கர்ப்பகாலத்தில் அதிக உடல் சோர்வு ஏற்படலாம். ராகி ஒரு சிறந்த ஆற்றல் உணவு ஆகும், ஏனெனில் இது கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சத்துக்கள் நிறைந்தது. இது தாய்க்கு நீடித்த ஆற்றலை வழங்குகிறது.

மேலும் படிக்க: கர்ப்ப காலத்தில் அடிக்கடி வயிற்றில் அரிப்பு இருக்கா? உடனடி நிவாரணம் பெற இதை ட்ரை பண்ணுங்க

ராகியை உணவில் சேர்ப்பது எப்படி எப்படி?


ராகியை கர்ப்பிணி பெண்கள் பல வழிகளில் உண்ணலாம்:

 

  • ராகி மாவு வைத்து தோசை, இட்லி, அப்பம் செய்து சாப்பிடலாம்.
  • ராகி கஞ்சி தயாரித்து குடிக்கலாம்.
  • ராகி மாவுடன் பால் கலந்து சாப்பிடலாம்.


அந்த வரிசையில் கர்ப்பிணி பெண்களுக்கு ராகி ஒரு சூப்பர் ஃபுட் ஆகும். இது பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்கி, தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. எனவே, கர்ப்பகால உணவில் ராகியை சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]