பாரிஸ் ஒலிம்பிக் களத்தில் அனுமதிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்த காரணத்தால் தங்க பதக்க வாய்ப்பை இழந்து மல்யுத்த களத்தில் இருந்து விலகிய வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸில் கட்சியில் இணைந்து ஹரியானா தேர்தல் களத்தில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டார். கண்ணுக்கு தெரியாத எதிரிகளால் ஒலிம்பிக் களத்தில் வீழ்த்தப்பட்ட வினேஷ் இம்முறை வெற்றிக்கனியை ருசிக்க மக்களிடம் தனக்கான நியாயத்தைக் கேட்டார். ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத் உட்பட 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பாஜக சார்பில் முன்னாள் ராணுவ வீரர் யோகேஷ் பைராகி, இந்திய தேசிய லோக் தளம் சார்பில் சுரேந்தர், சில அங்கீகரிப்பட்ட கட்சிகள் மற்றும் 6 சுயேட்சை களம் கண்டனர்.
देश की बेटी विनेश फोगाट को जीत की बहुत बहुत बधाई।
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) October 8, 2024
यह लड़ाई सिर्फ़ एक जुलाना सीट की नहीं थी, सिर्फ़ 3-4 और प्रत्याशियों के साथ नहीं थी, सिर्फ़ पार्टियों की लड़ाई नहीं थी।
यह लड़ाई देश की सबसे मज़बूत दमनकारी शक्तियों के ख़िलाफ़ थी। और विनेश इसमें विजेता रही।#VineshPhogat… pic.twitter.com/dGR5m2K2ao
மல்யுத்த வீராங்கனை Vs WWE வீராங்கனை
யாரும் எதிர்பாராதவிதமாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு எதிராக WWE வீராங்கனை கவிதா ராணியை ஆம் ஆத்மி கட்சி களமிறக்கியது. இதனால் மல்யுத்த வீராங்கனை Vs WWE வீராங்கனை என அரசியல் களம் மாறியது. இந்த தொகுதியில் கடந்த முறை ஜனநாயக ஜனதா கட்சியின் அமர்ஜீத் தண்டா வெற்றி பெற்றிருந்தார். மல்யுத்த களத்தில் இறுதிப்போட்டிக்குள் நுழைய 1/16, 1/8,1/4 என்ற சுற்றுகள் போலவே 2019 சட்டமன்ற உறுப்பினர் அமர்ஜீத் தண்டா, ஆளுங்கட்சியின் வேட்பாளர் யோகேஷ் பைராகி, ஆம் ஆத்மியின் கவிதா ராணி மற்றும் இதர வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டிய சூழல் வினேஷ் போகத்திற்கு உருவானது.
ஜூலானா தொகுதியில் வினேஷ் வெற்றி
அக்டோபர் 5ஆம் தேதி ஹரியானா சட்டமன்ற தேர்தலில் 90 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அக்டோபர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் வினேஷ் போகத் முதல் இரண்டு சுற்றுகள் முன்னிலை வகித்து அதன் பிறகு பின்னடைவை சந்தித்தார். இறுதியாக 15 சுற்றுகள் முடிவுகள் 65 ஆயிரத்து 80 வாக்குகள் பெற்று வினேஷ் போகட் 6 ஆயிரத்து 15 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தினார். 2019 சட்டமன்ற உறுப்பினரான அமர்ஜீத் தண்டா 2 ஆயிரத்து 477 மட்டுமே பெற்று டெபாஸிட் இழந்தார்.
ஒலிம்பிக் விதிகளால் பதக்க வாய்ப்பை தவற விட்ட வினேஷ் போகத்திற்கு அரசியலில் வெற்றிக்கனியை மக்கள் தந்துள்ளனர். 30 அடி மல்யுத்த களத்தில் எதிராளிகளை தோற்கடித்த வினேஷ் போகட் இனி சட்டமன்றத்தில் அரசியல் எதிரிகளை புரட்டி எடுக்க வாய்ப்புள்ளது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation