பட்ஜெட்டுக்கு முன்பாக அல்வா கிண்டுவது ஏன் ? லாக் டவுனில் நிதியமைச்சக அதிகாரிகள்

ஒவ்வொடு ஆண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டுக்கு முன்பாக அல்வா தயாரிக்கப்படுவது வழக்கம். அல்வா தயாரிப்புக்கும் மத்திய பட்ஜெட்டுக்கும் தொடர்பு என்ன ? பின்னணியை இந்த பதிவில் பார்க்கலாம்.
image

இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் தலையெழுத்தை நிர்ணயிக்க போகும் மத்திய பட்ஜெட் 2025 பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்படவுள்ளது. வருமான வரி குறைப்பு உட்பட பல துறைகளில் சலுகைகளை பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வது 8வது முறையாகும். இதில் ஒரு இடைக்கால பட்ஜெட்டும் அடங்கும். ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் முன்பாக நாடாளுமன்றத்தில் அல்வா தயாரிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அல்வா தயாரிப்புக்கும் மத்திய பட்ஜெட்டுக்கும் தொடர்பு என்ன ? விரிவாக பார்க்கலாம்.

அல்வா தயாரிக்கும் நிகழ்வு

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் ஒரு வார காலத்திற்கு முன்பாக அல்வா தயாரிக்கும் நிகழ்வு நடைபெறும். பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி அல்வா தயாரிப்பு நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். மாலை 5 மணி நாடாளுமன்றத்தின் வடக்கு பிளாக்கில் நடந்த அல்வா கிண்டும் நிகழ்வில் நிதியமைச்சகத்தின் செயலாளர், நிதியமைச்சக அதிகாரிகள், பட்ஜெட் தயாரிப்பில் பணி செய்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அல்வா கிண்டிய பிறகு நிதியமைச்சர் அங்கிருக்கும் நபர்களுடன் அதை பகிர்ந்தார்.

பட்ஜெட்டில் அல்வா தயாரிப்பு பின்னணி

பட்ஜெட்டுக்கு முன்பான அல்வா தயாரிப்பை கொண்டாட்டமாக கருதுவதில்லை. பட்ஜெட் தயாரிப்பில் பணி செய்த நபர்களின் கடின உழைப்பை அல்வா கிண்டும் நிகழ்வு குறிக்கிறது. பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவரும் இந்த நிகழ்வில் பாராட்டப்படுகின்றனர். அதே போல நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பான லாக் டவுன் காலத்தையும் அல்வா தயாரிப்பு நிகழ்வு குறிக்கிறது.

பட்ஜெட் லாக் டவுன்

முன்னொரு முறை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே கசிந்துள்ளது. இதன் காரணமாக லாக் டவுன் காலம் கடைபிடிக்கப்படுகிறது. மத்திய பட்ஜெட்டின் பாதுகாப்பு கருதி வடக்கு பிளாக்கில் நிதியமைச்சகத்தை சேர்ந்த அனைவரும் தனிமைபடுத்தப்படுகின்றனர். இந்த இடைப்பட்ட நாட்களில் அவர்களுக்கு தொலைதொடர்பு வசதி கிடையாது. பட்ஜெட் விவரங்கள் வெளியே கசியாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மத்திய அமைச்சரவையில் பட்ஜெட் ஒப்புதல் பெற்று அச்சகடிப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வரை அனைவருமே நாடாளுமன்றத்தின் வடக்கு பிளாக்கில் தனிமைபடுத்தப்பட்டு இருப்பார்கள். டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டாலும் அதன் பாதுகாப்பை உறுதிசெய்திட புலனாய்வு பிரிவினர் திடீர் சோதனை நடத்துவது உண்டு. இம்முறை பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி நிறைவுபெறவுள்ளது. குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஜனவரி 31ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசவுள்ளார்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP