செல்லம் கொஞ்சுவதும், கண்டிப்பதும் அதிகமானால் ஆபத்து தான். குழந்தை பருவத்தில் நாமும் நம்முடைய பெற்றோரின் கோபத்திற்கு ஆளாகி இருப்போம். வாங்கிய திட்டுக்களையும் அடி உதைகளையும் கையில் எண்ணி விட முடியாது. ஏன் பள்ளி ஆசிரியரிடம் கூட ஒரு சில நாட்கள் அடிவாங்கி இருப்போம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் பள்ளிகளில் குழந்தையை அடிப்பது கண்டுக்க தக்க விஷயமாகிவிட்டது. குழந்தைகளை அடிப்பது தவறான செயல். நீங்களும் உங்கள் குழந்தையை அடிப்பீர்கள் என்றால், அதனால் ஏற்படும் விளைவுகளையும் நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்.
உறவில் இடைவெளி
நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களும் நம்மைப் பாதிக்கின்றன. இந்நிலையில், நாம் குழந்தைகளை அடிக்கும்போது அவர்களும் எதையாவது யோசித்து கொண்டே இருப்பார்கள். பல சமயங்களில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே இடைவெளி ஏற்படுகிறது, இதனால் தங்கள் குழந்தைகளுக்குத் தங்களைப் பிடிக்கவில்லை என்று நினைக்கத் தொடங்குகிறார்கள்.
இந்த பதிவும் உதவலாம்: பிள்ளைகள் தவறான வார்த்தைகளை பேசும்போது, பெற்றோர்கள் செய்ய வேண்டியவை
சொல் பேச்சு கேளாமை
ஒரு சில பெற்றோர்கள் சிறு தவறு தொடங்கி பெரிய தவறுவரை, குழந்தைகள் தவறு செய்தாலே அடிப்பார்கள். இது அடிக்கடி நேரந்தால், அவர்கள் மனதில் பயம் நீங்கிவிடும். இதன் விளைவாக நீங்கள் சரியான விஷயங்களைச் சொன்னாலும் அதை கேட்பதை நிறுத்தி விடுவார்கள். குழந்தைகளை அடிக்காமல் எது சரி? எது தவறு? என்ற வித்தியாசத்தை அன்புடன் புரிய வைப்பது நல்லது.
கவன சிதறல்
அடிக்கடி அடித்து வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு கவன சிதறல்கள் ஏற்படலாம். இவர்களின் கவனிக்கும் திறன் வளர்ச்சி அடையாது. இதனால் அவர்களால் எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாது, மேலும் எந்த விதமான வேலை செய்யவும் சிரமபடுவார்கள். அதுமட்டுமின்றி படிக்கும் விஷயத்திலும் பிரச்னைகளைச் சந்திக்கலாம்.
சுபாவத்தில் மாற்றம்
குழந்தைகள், தாங்கள் பார்ப்பதையே கற்கின்றனர். பெற்றோர்கள் ஒருவரை ஒருவர் நடத்தும் விதம், கொடுக்கும் மரியாதை என தான் பார்க்கும் விஷயங்களையே அவர்களும் செய்வார்கள். இந்நிலையில் மோசமான நடவடிக்கைகள் அவர்களைப் பெரிதும் பாதிக்கும். பல சமயங்களில் காரணமின்றி அவர்கள் கோபப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: என் மகன் மூக்கில் விரல் வைக்கிறான், எப்படி தடுப்பது?
நம்பிக்கையின்மை
குழந்தைகளை அடிப்பது அவர்களின் தன்னம்பிக்கையை இழக்க செய்கிறது. இதனால், பிறருடன் பேசவும், மேடையேறி திறமையைக் காட்டவும் தயங்குவார்கள். மேலும் தன்னம்பிக்கையின்றி பல சிரமங்களையும் சந்திக்க நேரிடும்.
குழந்தைகளை அடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரிந்த கொண்ட பின், இனியும் அதை செய்ய வேண்டாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation