மழைக்காலம் வந்துவிட்டாலே பருவ கால தொற்று நோய்களின் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். காய்ச்சல், சளி, இருமல், மலேரியா, டெங்கு, வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவையோடு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சந்திக்க நேரிடும். குறிப்பாக குழந்தைகளுக்கு மழைக்காலத்தில் அலர்ஜி, எக்சிமா உள்ளிட்ட தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பார்கள். இதனால் குழந்தைகள் எரிச்சல் உணர்வுகளை அடைவதோடு காரணம் இன்றி அழுதுக் கொண்டே இருப்பார்கள்.
இதுபோன்று நிலையில் உங்களது குழந்தைகள் உள்ளார்களா? அப்படியென்றால் ஆரோக்கியமான முறையில் வறண்டு போகும் சருமத்தை எப்படி சரி செய்வது? என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: இந்த வழிமுறைகளை கொண்டு டெங்குவிலிருந்து குடும்பத்தை பாதுகாக்கவும்
வெயில் காலமாக இருந்தாலும், மழைக்காலமாக இருந்தாலும் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சருமம் வறண்டு விடும். முகத்தில் ஆங்காங்கே தோல் உரிதல், உதடு காய்ந்து போவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதை சரி செய்ய வேண்டும் என்றால், குழந்தைகளை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். இதற்கு அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொள்ளவும். இது சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.
மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு அதிக இராசயனங்கள் கலந்த சோப்புகளைப் பயன்படுத்தக்கூடாது. லேசான சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும். இதோடு எண்ணெய்களை முகம் மற்றும் கைகளில் தடவவும். இதனால் தோல் உரிதல் பிரச்சனைகள் ஏற்படாது.
மழைக்காலத்தில் சளி, இருமல் பிரச்சனைகள் ஏற்படும் என்பதற்கான சுடு தண்ணீரில் குழந்தைகளைக் குளிக்க வைப்போம். இது சரியான நடைமுறை என்றாலும் சூடு தண்ணீரைக் கொண்டு குளிக்க வைக்கும் போது, சருமத்தில் உள்ள எண்ணெய் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக அகலக்கூடும். இது சரும வறட்சி வழிவகுக்கும் என்பதால், சீக்கிரம் குளிக்க வைக்க வேண்டும்.
மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய சரும தொற்றுகள், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றால், ஆடைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். காட்டன் ஆடைகள், லேசான ஆடைகளை அணிய வேண்டும். சருமத்தை எரிச்சலூட்டும் ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: குழந்தைகளை பெரிதும் தாக்கும் மஞ்சள் காமாலை- வீட்டு சிகிச்சை என்ன தெரியுமா?
குழந்தைகள் பள்ளிக்குச் சென்றாலும், வெளியில் விளையாட சென்றாலும் அவர்களுக்கு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும். சருமத்தில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தி தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இவற்றையெல்லாம் மழைக்காலத்தில் முறைகளைப் பின்பற்றினாலும், சருமத்தில் தொடந்து வறட்சி, அரிப்பு, தோல் உரிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக குழந்தை நல மருத்துவரை அணுகுவது நல்லது.
Image source - Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]