Budget 2025 : வருமான வரி விலக்கு முதல் ரூ.2 கோடி கடன் வரை; பட்ஜெட்டின் டாப் 10 சிறப்பம்சங்கள்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025-2026 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் டாப் 10 சிறப்பம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம். பெண்கள் முன்னேற்றத்திற்கான நிதி ஒதுக்கீடு முதல் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றங்கள் குறித்த விவரம் இங்கே.
image

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-206 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு இடைக்கால பட்ஜெட் உட்பட 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இந்த முறை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரை 1 மணி நேரம் 14 நிமிடங்கள் நீடித்தது.

பட்ஜெட் 2025 : டாப் 10 அம்சங்கள்

  • பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு 2025-2026 நிதி பட்ஜெட்டில் 4 லட்சத்து 49 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டை காட்டிலும் அதிகமாகும். 2024-2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 3 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • நடுத்தர வர்க்கத்தினரின் வரி சுமையை குறைக்கும் விதமாக மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவோர் இனி வருமான வரி செலுத்த தேவையில்லை. ஆதாவது ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாயும், 75 ஆயிரம் ரூபாய் நிலையான வரிக்கழிவும் சேர்த்து வருமானம் 12.75 லட்சம் ரூபாயாக இருந்தால் வரி செலுத்த தேவையில்லை. இது புதிய முறையில் வரி செலுத்துவோருக்கு பொருந்தும்.
  • அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும். முதற்கட்டமாக 2025-26 நிதியாண்டில் 200 மையங்கள் அமைக்கப்படும்.
  • வரும் ஆண்டில் மருத்துவ கல்லூரிகளில் 10 ஆயிரம் மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 75 ஆயிரம் மருத்துவ இடங்களை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாரத்நெட் திட்டத்தின் கீழ் இணைய சேவை அளிக்கப்படும்.
  • எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளை சேர்ந்த முதல் முறை தொழில்முனையும் பெண்களுக்கு 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும். திறன் மேம்பாடு பயிற்சி வழங்குவதோடு அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் முதல் முறை தொழில்முனைவோருக்கு தலா 2 கோடி ரூபாய் கடன் அளிக்கப்படும்.
  • 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதியை உறுதி செய்திடும் திட்டமான ஜல் ஜீவன் திட்டம் 2028ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இங்கிருந்து கல்வி, மருத்துவ செலவுகளுக்கு பணம் அனுப்பினால் 7 லட்சம் ரூபாய்க்கு மேல் வரி பிடித்தம் செய்யப்பட்டது. தற்போது உச்சவரம்பு 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • கிசான் கிரெடிட் அட்டைக்கான உச்ச வரம்பு 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவர்.

மேலும் படிங்கபட்ஜெட்டுக்கு முன்பாக அல்வா கிண்டுவது ஏன் ? லாக் டவுனில் நிதியமைச்சக அதிகாரிகள்

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP