herzindagi
How to handle work pressure

Women Work Pressure: பெண்களே.. வேலையினால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமா? இதோ சிம்பிள் டிப்ஸ்!

<span style="text-align: justify;">ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வி, பொருளாதாரம் என பலவற்றில் மேன்மை அடைந்திருந்தாலும், இன்னும் பெண்கள் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.</span>
Editorial
Updated:- 2024-01-19, 20:07 IST

வேலை செய்யும் பெண்களில் பெரும்பாலானோர் தாயாக, முதியவர்களைக் கவனித்துக் கொள்பவராக, குடும்பத்தில் அனைவருக்கும் உணவுகளை வழங்குபவர் என பல பொறுப்புகளை வகித்து வருகின்றனர். ஆண்களை விட பெண்கள் தினமும் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கான பாலின பாகுபாடு, சமத்துவமின்மை பெரும் பிரச்சனையாக உள்ளது.

ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வி, பொருளாதாரம் என பலவற்றில் மேன்மை அடைந்திருந்தாலும் இன்னும் அவர்களது வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகளவில் உள்ளது. ஆனாலும் குடும்பத்தின் எதிர்கால தேவைகளைக் கருத்தில் கொண்டு எந்த வேலையையும் அசராமல் பார்க்கும் வல்லமைப் படைத்தவர்கள் பெண்கள். இதோடு உங்களை மேலும் வல்லமைப் படைத்தவர்களாக மாற்ற முயல்கிறீர்களா? அப்படியென்றால் இதோ இந்த வழிமுறைகளை உங்களது வாழ்க்கையில் தவறாது கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள்.

 working women ()

பெண்களும் வேலைப்பளுவும்:

  • எந்த காலக்கட்டத்திற்கும் ஏற்றார் போல் தங்களை மாற்றிக்கொள்ளும் குணாதிசயங்கள் கொண்டவராக பெண்கள் இருந்தாலும், சில நேரங்களில் பல பிரச்சனைகள் அவர்களையும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும். இதை தவிர்க்க வேண்டும் என்றால் நீங்கள் பல இடங்களில் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.  பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அமைதி தான் சிறந்த தீர்வாக உங்களுக்கு அமையக்கூடும்.
  • பணியிடம் மற்றும் வேலையில் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பான ஒன்று. இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் எதையும் மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது. புதிய விஷயங்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டும். என்றால், நிறைய புத்தகங்களை நீங்கள் வாசிக்க வேண்டும். உங்களுக்குப் பிடித்தவர்களிடம் பேசுவதற்கு முயற்சி செய்யுங்கள். இது உங்கள் மனதில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க உதவியாக இருக்கும்.
  • வீட்டில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்ள நினைக்கும் பெண்கள் சுய கவனிப்பை மறந்து விடுகிறார்கள். சில நேரங்களில் பணியிடத்தில் ஏற்படும் மன அழுத்தம் அவர்களை விரக்தி அடையச் செய்யும். அப்போது நமக்கு யாருமே இல்லை என்ற மனநிலையும் உண்டாகும்.  எப்போதும் சுய கவனிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்ய முயற்சி செய்யுங்கள். யாருக்காகவும் அதை விட்டுக் கொடுத்து விடாதீர்கள்.
  • வீட்டிலிருந்து வேலைப் பார்த்தாலும், அலுவலகத்தில் சென்று பார்த்தாலும் அனைத்து வேலைகளிலும் சில இடர்பாடுகள் ஏற்படும். ஆரம்பத்தில் தீர்வு காண்பது என்பது முடியாத காரியம்.  சில நேரங்களில் அதிக மன அழுத்தத்திற்கு நம்மை ஆழ்த்திவிடும். எனவே வேலையில் குழப்பம் மற்றும் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் தொழில் முறை உதவியை நாடுவது நல்லது.
  • பெண்களுக்கு 24 மணி நேரமும் ஏதாவது வேலை இருந்துக் கொண்டே தான் இருக்கும். ஆனாலும் உங்களுக்கான நேரம் ஒதுக்கி தியானம், வாக்கிங், ஜாக்கிங் போன்ற உடற்பயிற்சியை நீங்கள் தவறாமல் மேற்கொள்ளவும்.

 work pressure for women

இது போன்ற முறைகளை நீங்கள் உங்களது வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்தாலே வேலையில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]