பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2023 - 2024ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்போரவையில் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பெண்களுக்கான மாதம் ரூ. 1000 உரிமைதொகை தொடங்கி பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகின. அதுக் குறித்து இங்கு விரிவாக பார்ப்போம்.
திமுக அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கான உரிமைத்தொகை திட்டம் அமலுக்கு வரும் தேதி வெளியாகியுள்ளது. கூடவே மகளிர் குழு கடன், இலவச பேருந்து பயணம் என பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் பல அறிவிப்புகள் இந்தாண்டு பட்ஜெட்டில் இடம் பிடித்துள்ளன.
தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்கிறார். பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் மார்ச் 23 முதல் 27 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்
- மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இந்த ஆண்டு ரூ.30,000 கோடி கடன் வழங்க இலக்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அரசுப் பணியாளர் (ஆண் மற்றும் பெண்) வீடு கட்டுவதற்கான முன் பணம் ரூ.50 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.
- புதிதாக ஒரு லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்படும்.
- மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடிக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு.

- அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளுக்கான கட்டிடங்கள் புதிதாக கட்டப்படும்.
- மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இந்த ஆண்டு ரூ.30,000 கோடி கடன் வழங்க இலக்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மகளிரின் கட்டணமில்லா பயணத்திட்டத்துக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கான உரிமை தொகை ரூ. 1000
கடந்தாண்டு பொது தேர்தலில் திமுக அரசு வழங்கிய தேர்தல் கோரிக்கையில் மிகவும் முக்கியமானது பெண்களுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம். இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என பெண்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்நிலையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்.15 முதல் மகளிருக்கான ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் அமலுக்கு வருவதாக பட்ஜெட்டில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்க, ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். தகுதிவாய்ந்த மகளிர்களுக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation