சென்னையில் கல்வி நிறுவன வளாகத்தில் மாணவி ஒருவர் வெளிநபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. தலைநகரில் கல்வி பயிலும் மாணவிக்கு நிகழ்ந்த கொடூரம் பெண்களுக்காக பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள சட்டப்பிரிவுகளில் குற்றங்களுக்கான தண்டனை அதிகரிப்பட்டுள்ளன. இந்த சட்டத்திருத்தம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என நம்பப்படுகிறது.
பெண்கள் பாதுகாப்பில் சட்டத்திருத்தங்கள்
- பாலியல் வன்புணர்ச்சி குற்றத்திற்கு இதற்கு முன்பு வரை குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்க சட்டம் அனுமதித்த நிலையில் தற்போது செய்யப்பட்டுள்ள சட்டத்திருத்தம் காரணமாக குறைந்தபட்சமாக 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை குற்றவாளிக்கு அளிக்க முடியும்.
- பெண்ணின் நெருங்கிய உறவினர் அல்லது காவல்துறை ஊழியர் பாலியில் தொந்தரவு அளித்தால் குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கினர். தற்போது சட்டத்திருத்தம் காரணமாக குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்க முடியும்.
- 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தால் குறைந்தபட்சமாக 20 ஆண்டுகள் கடுங்காவல் அல்லது ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை குற்றவாளிக்கு விதிக்கப்பட்டது. தற்போது 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை நீக்கப்பட்டு ஆயுள் அல்லது மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
- பாலியல் வன்புணர்ச்சி மற்றும் மரணத்தை விளைவிக்கும் குற்றங்களுக்கு இதுவரை குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளிக்க முடியும். தற்போதைய சட்டத்திருத்தத்தால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை உறுதி.
- பெண்ணை கூட்டு பாலியல் வண்புணர்ச்சி செய்யும் குற்றவாளிகளுக்கு அளித்து வந்த ஆயுள் முழுக்க சிறை தண்டனையை மரண தண்டனை அளிக்க சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
- பெண்களிடம் மீண்டும் மீண்டும் குற்றம் இழைத்தவர்களுக்கு அளித்து வந்த ஆயுள் சிறை தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- பாலியல் தொல்லை குற்றத்திற்கான தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- இதற்கு முன்பு வரை பெண்ணை பின்தொடரும் குற்றத்திற்கு தண்டனை இல்லை. தற்போது முதல் முறை பின்தொடர்வதற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 2வது முறை பின்தொடர்வதற்கு
- 7 ஆண்டுகளும் சிறை தண்டனை வழங்கப்படும்.
- பெண்ணின் மீது ஆசிட் வீசினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. தற்போது நேரடியாக ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கலாம்.
- ஆசிட் வீச்சு முயற்சிக்கு சட்டத்திருத்தத்திற்கு முன்பாக 5 முதல் 7 ஆண்டுகள் தண்டனை அளிக்க முடியும். தற்போதிலிருந்து 10 ஆண்டுகள் சிறை முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அளிக்கலாம்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation