பார்த்தவுடன் காதல், முதல் சந்திப்பில் காதல், முதல் பார்வையிலேயே காதல் போன்ற மாயாஜாலத்தை திரைப்படங்களில் பார்த்திருப்போம். திரைப்படங்களில் கண்டு ரசிப்பதற்கு நன்றாக இருக்கும். நிஜ வாழ்க்கையில் யாருக்கும் அப்படி நடக்காது. உண்மையான காதலில் இரு உள்ளங்கள் நன்றாக புரிந்து கொண்டு ஒன்றாக வாழ்க்கையில் பயணிப்பார்கள். உளவியல் ரீதியாக பார்த்தால் காதலில் ஏழு நிலைகள் உள்ளன. காதலின் ஒவ்வொரு நிலையும் புதிய அனுபவத்தை தரும், புது புது விஷயங்களை கற்றுக் கொடுக்கும். இந்த பதிவில் காதலின் ஏழு நிலைகள் என்ன ? உங்கள் காதல் எந்த நிலையில் உள்ளது என்பதை பார்க்கலாம்.
காதலில் ஏழு நிலைகள்
காதலில் ஈர்ப்பு
காதலின் முதல் நிலை ஈர்ப்பு ஆகும். முகம், கண்கள், சிரிப்பு, குரல் மீது காதல் வயப்படுவீர்கள். இருவரின் முதல் சந்திப்பில் கண்களால் மோகம் பரிமாறும். ஈர்ப்பு காரணமாக மீண்டும் அந்த நபரை அடிக்கடி சந்திக்க நினைப்பீர்கள். தினமும் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என ஆசைப்படுவீர்கள்.
இணக்கம்
காதலின் இரண்டாவது நிலை இணக்கம். அந்த நபரை சந்திக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு தொடர்பு, இணக்கத்தை உணர்வீர்கள். அந்த நபர் இன்றி ஒரு நாளை கூட கடப்பது கடினமாக தோன்றும். தூக்கத்தை தொலைப்பீர்கள்.
காதல்
மூன்றாவது நிலை வெளிப்படையாக காதலை சொல்வது. நிறை குறை இருந்தாலும் அந்த நபரை உங்களுக்கு பிடிக்கும். அந்த நபர் மீது அக்கறை செலுத்துவீர்கள்.
நம்பிக்கை
காதலின் நான்காவது மற்றும் முக்கியமான நிலை நம்பிக்கை. காதலிக்கும் நபர் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருப்பீர்கள். சின்ன சின்ன விஷயங்களில் கூட அந்த நபரின் துணையின்றி செய்வதற்கு மனம் தயங்கும். உறவில் நம்பிக்கை இருந்தால் காதல் தானாக வளரும்.
அர்ப்பணிப்பு
காதலில் ஐந்தாவது நிலை அர்ப்பணிப்பு. காதலில் எதையும் எதிர்பார்க்காமல் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். ஒருவரின் இன்பம் மற்றொரு நபருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். துன்பம் இருந்தால் மற்றொரு நபருக்கு வலியை கொடுக்கும்.
காதல் பைத்தியம்
அந்த நபர் இல்லையெனில் வாழ்க்கையே இருண்டது போல் உணர்வீர்கள். நாள் முழுக்க அந்த நபரை பற்றி மட்டுமே நினைத்து கொண்டிருப்பீர்கள். வெறித்தனமாக காதலிப்பீர்கள்.
விட்டுக்கொடுத்தல்
காதலுக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுப்பது ஏழாவது நிலை ஆகும். காதலுக்காக சுயநலமின்றி முடிவுகளை எடுப்பீர்கள். காதலுக்காக எதையும் செய்யலாம் எனத் தோன்றும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation