ஒரு சில வீடுகளில் இரு மொழிகளை பேசுவார்கள், ஒரு சிலர் தங்கள் குழந்தையிடம் தாய்மொழியில் மட்டுமே பேசுவார்கள். குழந்தைகளுக்கு பல மொழிகளில் பேச கற்றுக் கொடுப்பதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இளம் வயதிலேயே ஒரு புதிய மொழியை அறிமுகப்படுத்துவது சிறந்தது.
ஒரு குழந்தையின் 7 வயதிற்குள் அவர்களுக்கு புது மொழியை அறிமுகம் செய்தால், அவர்களால் அதை எளிதாக கற்றுக்கொள்ள முடியும். குழந்தைகளுக்கு எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறோமே, அவ்வளவு எளிதாக அந்த மொழியைக் கற்றுக்கொள்வார்கள். வளர்ந்த பிள்ளைகளால் ஒரு மொழியை கற்றுக்கொள்ள முடியாது என்பது அர்த்தம் அல்ல. இருப்பினும் வயது கூடும் போது அவர்களின் கற்பித்தல் முறையும் மாறுகிறது, இதனால் ஒரு புது மொழியை கற்றுக்கொள்வது அவர்களுக்கு சற்று கடினமாக இருக்கலாம். எனவே உங்கள் குழந்தைக்கு ஒரு மொழியை கற்றுக் கொடுக்க விரும்பினால் அதை தாமதிக்காமல் இன்றே தொடங்குங்கள்!
உங்கள் குழந்தைக்கு ஒரு மொழியை கற்றுக் கொடுப்பதற்கான சுலபமான வழிகளை இப்போது பார்க்கலாம்.
முறையான திட்டமிடல்
ஒரு மொழியை முறையாக கற்றுக் கொடுப்பதற்கு சரியான திட்டமிடல் அவசியமானது. உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாடங்களை திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள். எழுத்துக்களில் தொடங்கி, சிறு சிறு வார்த்தைகளை அறிமுகம் செய்து குழந்தையை சரளமாக பேச வைப்பது வரை முறையாக திட்டமிடுங்கள். ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் குழந்தையின் முன்னேற்றம் குறித்து பதிவு செய்யுங்கள். புதிய மொழியை கற்றுக் கொள்வதில் குழந்தை அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறாரா என்பதையும் சரிபார்க்கவும்.
கற்றலை மகிழ்ச்சியாக்குங்கள்
குழந்தைகளை பொருத்தவரை, ஒரு விஷயத்தை வேடிக்கையாக சொல்லிக் கொடுத்தால் அதை அவர்கள் சிறப்பாக கற்றுக் கொள்வார்கள். எனவே குழந்தைக்கு ஒரு மொழியை கற்றுக் கொடுக்கும் பொழுது கடினமான ஆசிரியராக நடந்து கொள்ள வேண்டாம். மொழியை கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை அதிகரிக்க விளையாட்டு மூலமாக வார்த்தைகளை சொல்லிக் கொடுக்கலாம்.
மொழிபெயர்க்க வேண்டாம்
குழந்தைக்கு ஒரு மொழியை கற்றுக் கொடுக்கும் பொழுது, புதிய வார்த்தைகளை தாய் மொழியில் மொழி பெயர்த்து அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டாம். ஆரம்பக் கட்டத்தில் புதிய மொழி பற்றிய புரிதலுக்கு இது உதவியாக இருக்கலாம். இருப்பினும் குழந்தைக்கு இது கூடுதல் சுமையாக இருக்கும். எனவே மொழி பெயர்ப்பதற்கு பதிலாக வார்த்தை அல்லது வாக்கியத்திற்கு ஏற்ற சூழலை காட்டி சொல்லி கொடுங்கள். ஃபிளாஷ் கார்ட்ஸ், பாடல்கள் மூலம் கற்பித்தலை வேண்டியக்கையாக மாற்றலாம்.
புத்தகங்களைப் படிக்கலாம்
நீங்கள் கற்றுக் கொடுக்க விரும்பும் மொழியில் உள்ள சிறந்த குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இவை குழந்தைக்கு ஏற்ற வகையில் நிறைய படங்களுடன் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு ஏற்கனவே தெரிந்த கதைகளை, நீங்கள் கற்றுக் கொடுக்க விரும்பும் மொழியில் படிக்கலாம் அல்லது கதைகளை சொல்லலாம். அவர்களுக்கு நன்கு அறிந்த கதைகளை புதிய மொழியில் படிப்பது அவர்களின் புரிதலை அதிகரிக்கும்.
புதிய மொழியில் பேசுங்கள்
கற்பிக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களிலும் புதிய மொழியில் உங்கள் குழந்தையுடன் உரையாடலாம். இதனுடன் புதிய மொழியில் பதிலளிக்கவும் அவர்களை ஊக்கப்படுத்துங்கள். இந்த மொழியில் பேசும் உறவினர்கள், நண்பர்கள் அல்லது சிறு பிள்ளைகளை உங்களுக்கு தெரிந்தால், உங்கள் குழந்தையை அவர்களுடனும் புதிய மொழியில் பேசுவதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுங்கள். இதை கட்டாயப்படுத்த வேண்டாம். ஏனெனில் புதிய மொழியில் பேச கட்டாயப்படுத்தும் பொழுது அவர்களுக்கு மொழியின் மீது விருப்பம் இல்லாமல் போகவும் வாய்ப்பு உள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: ஆண்பிள்ளைகளுக்கு மாதவிடாய் பற்றிய புரிதல் ஏன் தேவை?
பொறுமையாக கற்றுக்கொடுங்கள்
குழந்தைக்கு மொழியை கற்றுக் கொடுக்கும் பொழுது பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். மொழியை கற்றுக் கொள்வதில் குழந்தைக்கு ஏதேனும் சிரமம் இருந்தால் அதை பொறுமையாக கேட்டறயவும். இதற்கான காரணத்தை கண்டறிந்து உங்கள் கற்பித்தல் அணுகு முறையை உங்கள் குழந்தையின் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: அடிக்காமல் திட்டாமல் குழந்தையை சமாளிப்பது எப்படி?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation